2026 தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் முதல் மிதுனம் வரை எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Mar 25, 2026 06:04 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட சில கால அவகாசத்தில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அப்படியாக சூரிய பகவான் சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று மேஷ ராசிக்கு இடம் மாறுவார். சூரிய பகவானுடைய இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் ஏற்படப்போகிறது.

அப்படியாக, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மேஷம் முதல் மிதுன ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது? அதிலும் குறிப்பாக மேஷ ராசிகளுக்கு ஏழரை சனி நடந்து கொண்டு இருக்கிறது. ஏழரை சனி என்பது பிற ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் துன்பத்தை கொடுத்தாலும் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலனையே கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

அடுத்ததாக ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் குறிப்பாக பெண்களுக்கு இந்த வருடம் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு நல்ல தொழில் வளர்ச்சி உண்டாகும்.

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக மிதுன ராசிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்க்கையில் முன்னேற்றமும் நீண்ட நாள் பொருளாதார சிக்கல்கள் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் உருவாக போகிறது.

திருமணமே ஆகவில்லை என்று வருந்தி கொண்டவர்கள் கட்டாயம் இவர்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு பகவான் வரும் பொழுது திருமணம் கைகூடிவரும். இருப்பினும் இவர்கள் தந்தை மற்றும் தாய் உடல் நிலையில் மட்டும் சற்று அக்கறை செலுத்தினால் நன்மை உண்டாகும் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக மேஷம் முதல் மிதுனம் வரை தமிழ் புத்தாண்டு எப்படி இருக்க போகிறது? என்று முழு பலனை இந்த காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ள கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US