மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?
இந்த வாழ்க்கை என்பது மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சுழற்சி. அதில் நன்மையாக இருக்கட்டும், தீமையாக இருக்கட்டும் அவசர அவசரமாக எல்லாம் நடந்து விடுகிறது. உதாரணமாக ஒருவருக்கு கெட்ட நேரம் சூழ்ந்து இருக்கிறது என்றால் இடைவேளை இல்லாமல் நிறைய தவறுகளை செய்து அடுக்கி விடுவார்கள்.
ஆனால் காலம் கடந்து தெளிவு என்ற ஞானம் பிறக்கின்ற நேரத்தில் செய்த தவறுக்கான பலன்களை அவர்கள் அனுபவித்தாக வேண்டிய நிலையை காலம் கொடுத்து விடுகிறது. அப்பொழுது என்ன நடந்தது? எதற்காக நடந்தது? ஏன் இப்படி நடந்தது என்று ஒரு இக்கட்டான நெருக்கடியான நிலையில் பிரபஞ்சம் நம்மை நிறுத்தி விடுகிறது.

ஆக, மனிதர்கள் நெருக்கடியான நேரத்தில் பல தவறுகளை செய்ய தூண்டக் கூடிய அந்த காலத்தில் மட்டும் மன வலிமையால் கட்டுப்படுத்தி விட்டால் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற பல அசம்பாவிதங்களில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
உண்மையில் பாவ செயல்கள் செய்வது என்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அந்த நேரத்தில் கொடுக்கிறது. உதாரணமாக ஒருவர் ஒருவரை காயப்படுத்தி ஒரு சந்தோஷத்தை அடைகிறார் என்றால் அந்த சந்தோஷம் மட்டுமே அவர்களுக்கு முழுமையாக இருக்கும்.
அதனால் ஒருவரை காயப்படுத்துவதை அவர்கள் இயல்பாகவும் நடைமுறையாகவும் கொண்டு பழக்கப்படுத்திக் கொண்டு கொள்வார்கள். அது தவறு என்று உணரக்கூடிய பக்குவத்தை அவர்கள் அடையக்கூடிய மகிழ்ச்சி கொடுப்பதில்லை. அதனால அவர்கள் அடுக்கடுக்காக தவறுகள் செய்து விடுகிறார்கள்.
காலம் கடந்து தெளிவு பிறக்கும் பொழுது அன்றைய நேரத்தில் நிதானமாக இருந்திருக்கலாம். இந்த தவறுகளை செய்யாமல் இருந்திருக்கலாம் என்று இவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இதே போல் தான் ஒரு நன்மையை செய்யக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தாலும் நம்மை அறியாமல் நம் நிறைய நன்மைகளை செய்து விடுவோம்.

அதற்கான புண்ணிய பலன்களும் சரியான நேரத்தில் நம்மை சேர்ந்து விடும். ஆதலால் மனிதர்கள் செய்யக்கூடிய தவறானது ஒரு வினாடியில் நடக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த ஒரு வினாடியை மட்டும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கட்டிப் போடக் கூடிய வலிமையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் நிச்சயம் இந்த பிரபஞ்சமானது நமக்கு நல் வழியையும் ஆசீர்வாதத்தையும் மட்டுமே வழங்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
விதி என்பது கட்டாயமாக இருந்தாலும் செய்த நன்மைகளும் புண்ணியமும் பல நெருக்கடியான சூழல்களில் இருந்து கட்டாயம் நம்மை காப்பாற்றும். ஆதலால் கடினமாக இருக்கக்கூடிய அந்த காலங்களில் மட்டும் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு விழுங்கிக் கொண்டு கடந்து விட்டால் இனி வரும் காலங்கள் இனிமையாக இருக்கும்.
ஆக, தவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் அமைந்தாலும் தவறுகள் செய்வதற்கு உங்கள் பக்கம் நியாயங்கள் இருந்தாலும் அதை செய்யாமல் தர்மத்தின் வழியும், நன்மையை செய்து வாழ்தலும் மட்டுமே மனிதனுக்குரிய சிறப்பு அம்சமும் அவனை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லக்கூடிய ஒரு அதிர்ஷ்டமாகவும் அமைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |