2026: ஏப்ரல் 14 நடக்கும் சூரியன் பெயர்ச்சி.. ராஜயோகம் யாருக்கு?
ஜோதிடத்தில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாதமும் அவருடைய இடத்தை மாற்றுவார். அந்த வகையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் சூரிய பகவான் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சுரிப்பார்.
இந்த மாற்றம் நிச்சயம் 12 ராசிக்கும் 27 நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதிலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சியால் மிகப்பெரிய அளவில் சாதகமான பலனை பெற போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி அவர்களுக்கு அதிக அளவில் நன்மையை கொடுக்கப்போகிறது. தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் தைரியமாக அணுகி சாதனை செய்யக்கூடிய நாள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த மாற்றமானது இவர்களுக்கு படைப்பாற்றலை அதிகரிக்கப்போகிறது. மனதில் தன்னம்பிக்கையும் தனியாக துணிச்சலோடும் போராடி எதையும் சாதித்து விடலாம் என்கின்ற நம்பிக்கை பிறக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். தவறான புரிதல் மனதில் இருந்து விலகும் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. குடும்ப உறவுகள் வலுவடையும். காதல் வாழ்க்கையில் இனிமை உண்டாகும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு அற்புதமான பலனை கொடுக்க போகிறது. இவர்கள் பல வழிகளில் நன்மை அடையப்போகிறார்கள். குடும்ப உறுப்பினரிடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.