2026: தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டில் கட்டாயம் இது நடக்குமாம்? பஞ்சாங்கம் சொல்வதென்ன?

By Sakthi Raj Apr 08, 2026 10:56 AM GMT
Report

தமிழ் ஆண்டுகளில் இதுவரை நடந்த விசுவாவசு ஆண்டுமுடிவடைந்து. அடுத்ததாக பராபவ ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டு 2026 தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பிறக்க உள்ளது. தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 60 ஆண்டுகள் சுழற்சியில் பராபவ ஆண்டு என்பது 40 வது ஆண்டாக கருதப்படுகிறது.

அப்படியாக இந்த பராபவ ஆண்டு என்பது வெறும் கால நிலையில் மாற்றம் மட்டுமல்ல மனமாற்றம் சமுதாயத்தில் மாற்றம் உலகளாவிய மாற்றம் என பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

2026: தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டில் கட்டாயம் இது நடக்குமாம்? பஞ்சாங்கம் சொல்வதென்ன? | 2026 Tamilnewyear Parabava Panchanga Prediction

பராபவ ஆண்டின் பிறப்பு :

மேலும் இந்த நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசிக்கு நுழைய இருக்கிறார். இதுவே தமிழ் புத்தாண்டு துவக்கமாகும்.

தமிழ் புத்தாண்டு 2026 பிறப்பு 14.04.2026 (சித்திரை 1) நட்சத்திரம் சதயம் லக்னம் ரிஷபம் நேரம் காலை 8.46

2026: ஏப்ரல் 8 நடக்கும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்லும் ராசிகள்

2026: ஏப்ரல் 8 நடக்கும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்லும் ராசிகள்

பராபவ ஆண்டின் வெண்பா :

"மிக்க பராபவத்தின் மேதினியிற்
பின் மழையாம்
தக்க பசைக்கடழைக்குமே இது பலிக்காது
நான்கு வகைப்பல்லுயிர்க்கும் துன்பம்
கல்லிக்காதனவே கருது"

இதனுடைய பொருள் இந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக வரலாம். இன்னும் குறிப்பாக பருவ மழை காலம் கடந்து வரக்கூடிய நிலையை குறிக்கிறது. வெயிலோடு கலந்த மழையை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கால்நடைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு வரலாம். பால் உற்பத்திகள் அதிகரிக்கும் என்றும் விவசாயம் சார்ந்த துறைகள் இன்னும் அதிகளவில் முன்னேற்றத்தைப் பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் வாழ்வாரத்தில் சில சவால்களை மக்கள் சந்திக்க கூடும் என்றும் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும் என்றும் உலக சந்தையில் மாற்றங்கள் நிலவும் என்றும் உலகளாவிய சுழற்சிகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

2026: தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டில் கட்டாயம் இது நடக்குமாம்? பஞ்சாங்கம் சொல்வதென்ன? | 2026 Tamilnewyear Parabava Panchanga Prediction

மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக தங்க பின்பற்ற வேண்டிய 8 குறிப்புகள்

மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக தங்க பின்பற்ற வேண்டிய 8 குறிப்புகள்

நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

மத்திய கிழக்கில் நடைபெறுகின்ற போரின் தாக்கங்கள் குறையலாம். ஆனால் முற்றிலும் மறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. புதிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் அதிகரிக்கலாம். இணைய வழிகளில் அதிகளவிலான மோசடிகள் பல ஏமாற்றங்கள் உண்டாகும்.

அரசு துறைகளில் நவீன மாற்றங்கள் உருவாகும். மக்களிடையே புதிய நோய் மற்றும் வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும். வீண் செலவுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் மன அழுத்தம் குழப்பங்களும் மக்களிடையே காணப்படும். அதனால் மக்கள் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்புகளை அதிகரிக்க வேண்டும்.

மக்கள் எதிலும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். யோகா தியானம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இந்த ஆண்டின் பெரிய வரப்பிரசாதம் என்ற எடுத்துக் கொண்டால் குருபகவான் ராஜாவாக இருப்பது தான். இதனால் ஆன்மீகத்தில் நாட்டமும் கோவில் வழிபாடுகளும் உயரும். மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US