மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக தங்க பின்பற்ற வேண்டிய 8 குறிப்புகள்
இந்த உலகத்தில் எந்த ஒரு கஷ்டமும் இறை வழிபாடு செய்வதால் நிவர்த்தி அடையும். அந்த வகையில் ஒருவருக்கு ஜாதகத்தில் நேரம் சரியில்லை அல்லது அவர்களுக்கு கை கொடுக்கக் கூடிய தசா புத்திகள் நடக்கவில்லை என்று வருந்தாமல் தொடர்ந்து அவர்கள் இறை வழிபாடும் செய்தும்சில விஷயங்களை பின்பற்றி வரும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் வந்த துன்பங்கள் காணாமல் சென்று விடும்.
அந்த வகையில் ஒருவருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் மகாலட்சுமி தாயாரின் அருள் பெற வேண்டும். அந்த வகையில், மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக வாசம் செய்வதற்கு பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

1. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதேனும் கோவிலுக்கு சென்று மாதுளம் பழம் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு.
2. கழுத்தில் ஸ்வஸ்திக் சின்னம் பொருத்திய டாலர் அணிந்து கொள்ளலாம் பாதுகாப்பாக இருக்கும். 3. தீராத கடன் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால் விரைவில் கடன் தொல்லை விலகும்.
4. கருப்பு நாய்களுக்கு உணவு அளித்து வரும் பொழுது வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.

5. தினம்தோறும்சிறிய மஞ்சள் பொடியை குழைத்து நெற்றியில் வைத்து வரும் பொழுது அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.
6. மாதம் ஒருமுறை கோவிலுக்கு சென்று ஏதேனும் முடிந்த அளவு காய்கறிகளை தானமாக வழங்குங்கள்.
7. வீட்டின் சுற்றுப்புறத்தில் மாதுளை பழம் செடி வளர்த்து வாருங்கள் அதிர்ஷ்டம் தேடிவரும்.
8. ஒரு வெள்ளைத் துணியில் நான்கு சிறிய வெள்ளை குண்டுமணிகளை சுற்றி எப்பொழுதும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள் பொருளாதாரம் நிலைத்திருக்கும்.
இந்த எட்டு விஷயங்களும் கடைபிடிக்க முடியாதவர்கள் முடிந்த அளவிற்கு ஏதேனும் ஒரு விஷயத்தை பின்பற்றி வரும்பொழுது வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |