2026 தை மாதம்: தவறவிடக்கூடாத விரதம் மற்றும் முக்கிய விஷேச நாட்கள்
தமிழ் மாதங்களில் தை மாதம் மிகவும் விசேஷமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் தமிழர் திருநாளான தை திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்கின்ற ஒரு நம்பிக்கையும் இந்த மாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.
தை மாதத்தில் தைப்பொங்கலில் துவங்கி பல்வேறு சிறப்பு பண்டிகைகள் இந்த மாதத்தில் வர இருக்கிறது. மேலும் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு தை முதல் நாள் பெயர்ச்சி ஆகிறார். இது உத்தராயன காலத்தில் துவக்க மாதமாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக இந்த மாதத்தில் குளிரின் தாக்கம் மெதுவாக குறைந்து சூரியனின் ஆதிக்கம் துவங்கக்கூடிய மாதமாக இந்த தை மாதம் இருக்கிறது. அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு தை மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?
எந்த நாட்களில் நாம் தவறாமல் விரதம் இருக்க வேண்டும் என்று பல்வேறு முக்கிய தகவல்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

தை மாதம் 2026 முக்கிய விசேஷ நாட்கள் :
ஜனவரி 15 தை 01 வியாழன் தைப்பொங்கல்
ஜனவரி 16 தை 02 வெள்ளி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 தை 03 சனி உழவர் தினம்
ஜனவரி 18 தை 04 ஞாயிறு தை அமாவாசை
ஜனவரி 25 தை 11 ஞாயிறு ரதசப்தமி
ஜனவரி 26 தை 12 திங்கள் குடியரசு தினம்
பிப்ரவரி 01 தை 18 ஞாயிறு தைப்பூசம்
தை மாதம் 2026 விரத நாட்கள் :
அமாவாசை ஜனவரி 18 ஞாயிறு தை 04
பெளர்ணமி பிப்ரவரி 01 ஞாயிறு தை 18
கிருத்திகை ஜனவரி 27 செவ்வாய் தை 13
திருவோணம் ஜனவரி 19 திங்கள் தை 05
ஏகாதசி ஜனவரி 29 வியாழன் தை 15
சஷ்டி
ஜனவரி 24 சனி தை 10
பிப்ரவரி 07 சனி தை 24
சங்கடஹர சதுர்த்தி பிப்ரவரி 05 வியாழன் தை 22
சிவராத்திரி ஜனவரி 17 சனி தை 03
பிரதோஷம்
ஜனவரி 16 வெள்ளி தை 02
சதுர்த்திஜனவரி 22 வியாழன் தை 08
தை மாதம் 2026 சுபமுகூர்த்த நாட்கள் :
ஜனவரி 28 தை 14 புதன் வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 06 தை 23 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 08 தை 25 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |