2026 பொங்கல்: தவறியும் இந்த இரண்டு உணவை மட்டும் கட்டாயம் எடுக்காதீர்கள்
12 மாதங்களில் தமிழர் திருநாளாக கொண்டாடப்படக்கூடிய பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் தைத்திருநாளை முன்னிட்டு அவர்களுடைய வீடுகளில் வண்ண நிறத்தில் கோலமிட்டு வாசலில் பொங்கல் வைத்து சூரிய பகவானையும் குலதெய்வங்களையும் பெரியவர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்று சிறப்பாக கொண்டாடுவார்கள்.
மேலும், தமிழர்களின் பாரம்பரியமாக கொண்டாட கூடிய இந்த பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், தை இரண்டாவது நாள் மாட்டு பொங்கலாகவும், தை மூன்றாவது நாள் காணும் பொங்கலாகவும் தொடர்ந்து நான்கு நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாடக்கூடிய ஒரு அற்புதமான பண்டிகையாகும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் அனைவரும் காலை எழுந்து சூரிய பகவானை மனதார நினைத்து வீடுகளில் சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள்.
இதனை தொடர்ந்து அவர்கள் தைத்திருநாளில் குறிப்பிட்ட சில இரண்டு உணவுகளை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகை அன்று நாம் பாகற்காய் மற்றும் கருப்பு எள் உணவில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

இந்த தைத்திருநாள் என்பது நம் வீடுகளில் இனிமையான சுவையையும் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் வரவேற்கக் கூடிய ஒரு அற்புதமான திருநாள் என்பதால் பாகற்காய் மட்டும் எள் என்கின்ற கசப்பான இரண்டு பொருட்களை இந்த தினங்களில் தவறியும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று வாஸ்து ரீதியாக சொல்லப்படுகிறது.
ஆக இந்த இரண்டு உணவு பொருட்களையும் இன்று தவிர்த்து தைத்திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடி இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |