Live: திருவண்ணாமலை மகாதீபம் நேரலை.. அருணாசலேசுவரர் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

By Sakthi Raj Nov 24, 2026 10:44 AM GMT
Report

இந்து சமய வழிபாடுகளில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்பது வெகு சிறப்பாக கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீடுகளிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபம் ஏற்றிய பிறகுதான் ஒவ்வொருவர் வீடுகளிலும் வாசலில் துவங்கி வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலை உச்சியில் ஏற்றக்கூடிய அந்த மகா தீபத்தை கண்டு தரிசிபவர்களுக்கு வாழ்க்கையில் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை திருநாளில் எந்த ஒரு இடத்தில் ஒரு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் அவை நமக்கு பெரிய அளவில் நற்பலனை அருள்கிறது.

அப்படியாக, திருவண்ணாமலை உச்சியில் ஏற்றக்கூடிய அந்த மகா தீப தரிசனம் காண்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் வசிக்கக்கூடிய சிவ பக்தர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காணக் கிடைக்காத அற்புதமான காட்சியை நாம் ஐபிசி வாயிலாக நேரலையில் கண்டு சிவபெருமாருடைய அருளோடு இந்த கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US