2026 வைகாசி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? யார் கவனமாக இருக்க வேண்டும்
ஜோதிடத்தில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுதும் தலைமை கிரகமான சூரிய பகவான் அவருடைய ராசியை மாற்றிக் கொண்டிருப்பார்.
அப்படியாக மே 15ஆம் தேதி அன்று வைகாசி மாதம் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. அப்படியாக வைகாசி மாதம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது? என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு விலகும். இவர்கள் இந்த மாதம் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் மாற்றம் உண்டு.
ரிஷபம்:
இவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய முயற்சிகள் கைகூடும். மனநிலையில் அவ்வப்போது தடுமாற்றம் உண்டாகும். மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீர்வை பெரும்.
மிதுனம்:
வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது அமைதி கொடுக்கும்.
கடகம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் மூத்த சகோதரர்களால் நல்ல ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிப்பு அந்தஸ்து உயரும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் பிரச்சனைகள் தீரும்.

சிம்மம்:
இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க வேலையில் நல்ல ஆதரவுண்டு. எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாடல் பாராயணம் செய்தால் நல்ல பலன் பெறலாம்.
கன்னி:
இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்கள் உயர் கல்விக்கான ஈடுபாடுகளில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முன்னேறி செல்வார்கள். ஆஞ்சநேய வழிபாடு செய்தால் தடைகள் விலகும்.
துலாம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பேச்சில் மிகவும் கனிவு அவசியம். எதிர்பாராத விதமாக ஒரு சில இடங்களில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு வாழ்க்கை துணையுடன் சில பிரச்சனைகள் வருவதால் வெளிப்படையாக பேசுவது மட்டுமே அதன் அதிலிருந்து விடுபடக்கூடிய தீர்வை கொடுக்கும். மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரலாம். இவர்கள் சூரிய பகவானுக்கு தண்ணீர் அர்ப்பணித்து வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு.
தனுசு:
இவர்கள் நீண்ட நாள் துன்பப்பட்டு இருந்த நோய்களிலிருந்து விடுதலை பெறுவார்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும்.
மகரம்:
இவர்கள் பூர்வீக சொத்தில் சந்தித்து வந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவார்கள். எந்த முடிவையும் நன்றாக ஆராய்ந்து முடிவு செய்து பிறகு இறங்கினால் வெற்றி நிச்சயம். ஏழை எளியவர்களுக்கான தானம் செய்வது நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்:
இவர்கள் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் பராமரிக்காக சில செலவுகள் செய்ய நேரலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைய் காப்பு சாற்றி வழிபாடு செய்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
மீனம்:
இவர்கள் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாகும். குறுகிய காலங்களில் தொழிலில் லாபங்களை பெறுவீர்கள். எழுத்து மற்றும் ஊடகத்துறையில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இவர்கள் ராகவேந்திராவை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |