வைகாசி விசாகம்: முருகப்பெருமான் நமக்கு சொல்லும் முக்கியமான செய்தி என்ன?
டாரட் கார்டு ரீடிங் என்பது ஜோதிடத்தில் ஒரு பழமையான கணிப்பு முறையாகும். அந்த வகையில் வைகாசி மாதம் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார் என்பது புராணம்.
வைகாசி விசாக சிறப்புகளை முன்னிட்டு முருகப்பெருமான் பக்தர்களுக்கு கூறக்கூடிய செய்திகள் என்ன என்பதை டாரட் கார்டு வழியாக டாரட்கார்டு வாசிப்பாளர் சாரா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
இப்பொழுது கீழே கொடுக்கப்பட்ட படத்தில் நீங்கள் ஏதேனும் முருகன் படத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்,. பிறகு முருகர் உங்களுக்கும் சொல்லக்கூடிய செய்தி என்னவென்று வரிசையாக பார்ப்போம்.

1.நீங்கள் முதல் படத்தை தேர்ந்தெடுக்க கூடியவர்களாக இருந்தால் உங்களுக்கு முருகப்பெருமான் சொல்ல கூடிய செய்தி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
நீங்கள் இவ்வாறு வழிபாடு செய்து முருகப்பெருமானை சரணடையும் பொழுது உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பங்கள் நடக்கும். காரணம், இவர்கள் முன்னோர்கள் எல்லோரும் நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் இவர்கள் வாழ்க்கை சற்று பின்னடைவில் இருப்பதால் விரதம் இருப்பதால் மட்டுமே நல்ல மாற்றங்களை பெற முடியும்.
2. நீங்கள் இரண்டாவது படத்தை தேர்ந்தெடுத்துக் கூடியவர்களாக இருந்தால், முருக பெருமான் உங்களுக்கு சொல்லக்கூடிய விஷயமும் நீங்கள் புதுமையான விஷயங்களை தேடி செல்லக்கூடியவராக இருக்கிறீர்கள். ஆக, புதுமையாக ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தை தேடி சொல்லும் பொழுது உங்களுடைய குணநலன்கள் மாறுபடுகிறது.
அதனால் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அளவிற்கு மீறி எடுத்துச் சொல்வதை தவிர்த்து கொள்வது நல்லது. மேலும், மகிழ்ச்சி, துன்பம் எதுவாக இருப்பினும் அளவோடு வைத்துக் கொண்டால் மட்டுமே வாழ்க்கை உங்களுக்கு வளமானதாக மாறும்.
3. மூன்றாவது முருகர் படத்தை தேர்ந்தெடுத்தவர் என்றால் உங்கள் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று சொல்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினருக்கும் இவர்கள் சிறு சிறு விஷயங்களை செய்து மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, சந்தன காப்பு சாற்றி இருக்கக்கூடிய முருகனை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் வளமாகும். சந்தன காப்பு சாத்துவதற்கு இவர்கள் சந்தனம் வாங்கி கொடுத்தாலும் இவர்கள் நல்ல மாற்றத்தை பெறலாம்.
4.நீங்கள் நான்காவது படத்தை தேர்ந்தெடுத்தவர் என்றால் உங்களுக்கு முருகன் சொல்லக்கூடிய செய்தி நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமை அடையாமல் பின்வாங்க கூடாது. எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அந்த காரியத்தை தொடர வேண்டும் என்று முருகப்பெருமான் சொல்லுகிறார்.
அது மட்டும் அல்லாமல் இவர்களுக்கு முருகப்பெருமானின் துணை எப்பொழுதும் இருப்பதால் வேலும் மயிலும் இவர்களுக்கு துணையாகவே இவர்களுடன் பயணம் செய்கிறது.
மேலும் அடுத்த இரண்டு படங்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு முருகப்பெருமான் என்ன செய்தி சொல்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |