2026: தொடங்கியது சுக்கிர மகா திசை... குபேர யோகம் யாருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனின் செல்வ, செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றுக்கு காரணியாக உள்ளார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலுவாக இருந்து விட்டால் அந்த நபருக்கு மகிழ்ச்சி மற்றும் பணத்தில் தட்டுப்பாடு இருக்காது.
அந்த வகையில், ஜூன் 23ஆம் தேதி அவர் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றி பூச நட்சத்திரத்திற்கு வருகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் செல்வ வளமும் காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதே போல் சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நினைத்த இடங்களில் சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய நிலையும் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு நிதி நிலையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. கேட்ட இடத்திலிருந்து பணம் கைகளுக்கு வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் துவங்கக்கூடிய வாய்ப்புகளை பெரும்.
தொழிலில் நஷ்டத்தை சந்திப்பவர்களுக்கு ஒரு புதிய தொடக்கமும் பயணமும் உண்டாகும். வியாபார ரீதியாக முக்கியமான நபர்களை சந்திக்க கூடிய யோகம் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு நல்ல பலனை வழங்கப்போகிறது. பல வழிகளில் இருந்து இவர்கள் பொருளாதார உயர்நிலை பெற போகிறார்கள். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும்.
பெயர் புகழ் உயரக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நட்புகள் வட்டாரம் உங்களுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |