நீங்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இது தானாம்

By Sakthi Raj Jun 12, 2026 06:13 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் எப்பொழுதும் தனித்துவமாக செயல்பட கூடியவர்கள். அப்படியாக, இந்த ராசியின் கர்ம பலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம். தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீக ஒழுக்கத்திலும் மற்றும் உடல் வலிமையிலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

குரு பகவான் ராசிநாதனாக கொண்டதால் இவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை முக்கியமாக பார்க்கக்கூடியவர்கள்.

பெரும்பாலான தனுசு ராசிக்காரர்களுக்கு தாயார் உடைய வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருப்பதில்லை. அதை போல், இவர்களுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வருவதை நாம் பார்க்கலாம்.

ஒரு சில தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் தாமதமாகவோ அல்லது முதல் திருமணம் பிரச்சனைக்குரியதாகவோ இருக்கிறது. ஒரு சிலருக்கு விவாகரத்து வரை சென்று அதில் அவர்கள் வெற்றி பெறக்கூடிய நிலையும் கொடுக்கிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் கணக்கில் புலியாக இருப்பார்களாம்.. ஏமாற்றவே முடியாதாம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் கணக்கில் புலியாக இருப்பார்களாம்.. ஏமாற்றவே முடியாதாம்

தனுசு ராசியினர் 25 வரை கல்விகள் சிறந்து விளங்கினாலும் வேலை விஷயங்களில் இவர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது.

மேலும், தனுசு ராசியினர் கூட்டுத்தொழில் எப்பொழுதும் கை கொடுப்பதில்லை. அதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் எந்த நேரத்திலும் குலதெய்வ வழிபாடுகளை மறக்கக்கூடாது.

அதைப்போல், இவர்கள் திருவெண்காடு சென்று புதன் பகவானின் வழிபடுவது இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். அதேபோல் பெருமாள் ஆலயம் சென்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பு.

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இன்னும் சிறந்து விளங்குவதற்கு பரிகாரமாக யானைக்கு கரும்பு அல்லது பச்சை புல் தானமாக வழங்குவது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மேலும், தனுசு ராசிகளுக்கு என்ன விஷயங்கள் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும் அவர்களுடைய முழு வாழ்க்கை பலன் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US