2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ?

Report

 இந்து மத வழிபாடுகளை எடுத்துக் கொண்டால் அதில் எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானையும் வழிபட்ட பிறகே நாம் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய தொடங்குகிறோம். காரணம், விநாயகரை வழிபாடு செய்து துவங்குகின்ற காரியம் எந்த ஒரு பின்னடைவையும் சந்திப்பதில்லை.

விநாயகர் சாணம், மஞ்சள், சந்தனம், களி மண் என எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும், அதில் நமக்கு எழுந்தருளி அருள் புரிவார் என்பது நம்பிக்கை. அந்த வகையில், விநாயகப் பெருமான் அவதரித்த தினமான ஆவணி மாதம் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி கருதப்படுகிறது. இதனை நாம் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம்.

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ? | 2026 Vinayagar Chathurthi Celebration Timing

எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களுக்கு விபத்தால் பாதிப்பு உண்டாகும்

எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களுக்கு விபத்தால் பாதிப்பு உண்டாகும்

இந்த 2026 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலையை எந்த நாளில் வாங்க வேண்டும்? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்? விநாயகர் சிலையை எத்தனை நாட்களில் வீடுகளில் வைத்திருக்க வேண்டும்? என்பதை பற்றி விவரமாக பார்ப்போம். 

விநாயகர் சதுர்த்தி 2026 வழிபாட்டு நேரம் :

விநாயகர் சதுர்த்தி 2026 தேதி:

செப்டம்பர் 14சதுர்த்தி திதி துவக்கம் - செப்டம்பர் 14 காலை 08.41 சதுர்த்தி திதி நிறைவு - செப்டம்பர் 15 காலை 09.22

விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம் :

செப்டம்பர் 13 - பகல் 03.10 முதல் மாலை 04.20 வரை அல்லது மாலை 06.00 மணிக்கு பிறகுசெப்டம்பர் 14 - காலை 09.10 முதல் 10.20 வரை

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ? | 2026 Vinayagar Chathurthi Celebration Timing

பலருக்கும் ஒவ்வொரு சந்தேகம் வரும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வாங்க வேண்டுமா என்பதே ஆகும். அந்த வகையில், களிமண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது என்பதால் விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்து பிறகு தண்ணீரில் கரைப்பதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீமை கர்ம வினைகள் யாவும் கரைந்து புதிய துவக்கம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால் முடிந்தவர்கள் நிச்சயம் சிலை வாங்குவது நல்ல பலன்களை கொடுக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு தவறியும் இந்த சிலைகளை வாங்கி விடாதீர்கள்

விநாயகர் சதுர்த்திக்கு தவறியும் இந்த சிலைகளை வாங்கி விடாதீர்கள்

விநாயகர் சிலை கரைக்கும் முறை :

விநாயகர் சிலையை வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்த பிறகு நீர் நிலைகளில் கரைக்கக் கூடிய வசதிகளை கொண்டவர்கள் நிச்சயம் அங்கு சென்று கரைக்கலாம்.

முடியாதவர்கள் வீட்டு பகுதிகளில் விநாயகர் வழிபாடு செய்கிறார்கள் என்றால் அவர்களிடம் சென்று நாம் விநாயகர் சிலையை கொடுத்து விட்டால் அவர்கள் சென்று அதை கடலிலோ ஆற்றிலோ கரைத்து விடுவார்கள்.

அதற்கும் வழியில்லை என்றால் வீட்டிலேயே ஒரு வாலியின் தண்ணீர் வைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கரைக்கலாம். பிறகு கரைந்த மண் மற்றும் தண்ணீரை ஒரு தொட்டியில் வைத்து புதிய செடிகள் நட்டு வைப்பதும் நன்மையை கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US