2026 ஆஷாட நவராத்திரி எப்பொழுது? வராஹி அம்மனை 9 நாட்கள் வழிபாடு செய்ய தவறாதீர்கள்
அம்பிகையை வழிபாடு செய்ய ஒன்பது நாட்கள் கொண்டாடும் பண்டிகையை நாம் நவராத்திரி என்கிறோம். சைத்ர நவராத்திரி, ஆஷாட குப்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, மகா குப்த நவராத்திரி என வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் இந்தியாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், இவற்றில் சைத்ர நவராத்திரியும், சாரதா நவராத்திரியுமேஅதிகமான நபர்களால் கொண்டாட கூடிய முக்கியமான பண்டிகையாகும், இருப்பினும் அந்த நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி ஒரு சிலருக்கு தான் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், இது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் வழிபாடாக போற்றப்படுகிறது.
இந்த வழிபாடு குறிப்பாக வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கும் நமக்கு பாதுகாப்பு, செல்வ வளம், தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெறுவதற்காக வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான நவராத்திரி ஆகும்.

ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியே ஆஷாட நவராத்திரி என்று சொல்வார்கள். நவராத்திரியை நாட்டின் பல்வேறு இடங்களில் இதை சாம்பரி நவராத்திரி, வாராஹி நவராத்திரி, காயத்ரி நவராத்திரி, பத்ரகாளி நவராத்திரிபோன்ற பெயர்களால் அழைப்பதுண்டு.
வட இந்தியாவில் இந்த நவராத்திரியை மிகவும் சக்தி வாய்ந்த நவராத்திரி யாக கொண்டாடுகிறார்கள். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி எப்பொழுது? தேதி மற்றும் முழு விவரங்களை பற்றி பார்ப்போம். இந்த 2026 ஆம் ஆண்டு ஆஷாடநவராத்திரி ஜூலை 15ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி வரை உள்ளது.
ஆஷாட நவராத்திரி 2026 தேதி :
நவராத்திரி நாள் 01, ஜூலை 15 ,கலச ஸ்தாபனம், சைலபுத்திரி பூஜை
நவராத்திரி நாள் 02, ஜூலை 16 ,பிரம்மச்சாரினி பூஜை
நவராத்திரி நாள் 03, ஜூலை 17, சந்திரகாந்தா பூஜை, கூஷ்மாண்டா பூஜை
நவராத்திரி நாள் 04, ஜூலை 18, ஸ்கந்தமாதா பூஜை
நவராத்திரி நாள் 05, ஜூலை 19, காத்யாயினி பூஜை
நவராத்திரி நாள் 06, ஜூலை 20, காலராத்திரி பூஜை
நவராத்திரி நாள் 07, ஜூலை 21, துர்காஷ்டமி, மகாகெளரி பூஜை, சண்டி பூஜை
நவராத்திரி நாள் 08, ஜூலை 22, சித்திதாத்ரி பூஜை
நவராத்திரி நாள் 09, ஜூலை 23, நவராத்திரி பாரணை

வராகியை வழிபட செய்ய காரணம்:
ஆஷாட நவராத்திரியில் வராகி அம்மனை வழிபாடு செய்வது அவசியம். இதற்கு பின்னால் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. அதாவது தேவி லலிதாவின் போர்படை தளபதி யாகவும், சப்த மாதர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுபவர் வாராகி அம்மன்.
இவர் ஒருவருடைய வாழ்க்கையில் தடைகளை நீக்கி, பாதுகாப்பையும் வெற்றியும் அருளக்கூடிய அற்புதமான தெய்வமாக விளங்குகிறார்.
அனைத்து தீமைகளில் இருந்தும் ஒருவரை காக்கக்கூடிய அற்புத தெய்வம். ஆதலால் ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வராகி அம்மன் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பயம் பொருளாதார நெருக்கடிகள் விலகுதல், தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் எதிரி தொல்லை இவை எல்லாம் அடியோடு ஓழியம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக வருகிறது.
ஆதலால் வராஹி அம்மனை இந்த காலகட்டங்களில் வழிபாடு செய்வது அற்புத பலன் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |