இந்த 3 ராசிக்காரர்கள் தானாகவே சென்று பிரச்சனையில் சிக்கிக்கொள்வார்களாம்
இந்த உலகத்தில் பல நேரங்களில் நன்மை கூட தீமையில் முடிவதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில், ஒரு சில ராசியினர் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினால் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், இறுதியில் அது அவர்களுக்கு பிரச்சினையையும் அவமானத்தையும் கொடுத்துவிடும். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினர் தானாகவே சென்ற பிரச்சனையை வாங்கி கொள்வார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இவர்கள் ஒருவருக்கு நன்மையை செய்ய வேண்டும் என்று எண்ணம் அதிகம் கொண்டிருப்பார்கள். ஆதலால் யாராவது அவர்களிடம் உதவி என்று கேட்டால் மறுநொடி யோசிக்காமல் அவர்களுக்காக இறங்கி உதவி செய்யக்கூடியவர்கள்.
இருப்பினும் இறுதியில் இவர்கள் செய்த அந்த நன்மையே இவர்களுக்கு தீங்காக முடிந்துவிடும். அது அவர்களுக்கு பிரச்சனையையும் அவப்பெயரையும் வாங்கி கொடுத்து விடும்.
கடகம்:
இவர்கள் ஒருவருக்கு பாவம் என்று இரக்கப்பட்டு தேடிச் சென்று உதவி செய்வார்கள். ஆனால், இறுதியில் இவர்களுக்கா நாம் பாவம் பார்த்தோம் என்று யோசித்து ஒதுங்கும் அளவிற்கு அந்த நபர்கள் தொந்தரவு கொடுத்து விடுவார்கள்.
காரணம் இவர்கள் எல்லோரையும் எளிதில் நம்பக்கூடிய தன்மை பெற்றவர்களாக இருப்பதால் அந்த அதீத நம்பிக்கையை இவர்களுக்கு பிரச்சினையை கொடுத்து விடுகிறது.
துலாம்:
இவர்கள் தனக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்காக சில ஆலோசனைகள் உதவிகள் செய்வது உண்டு. ஆனால் இறுதியில் இவர்களுக்காக நாம் இப்படி சிந்தித்ததே தவறு என்று சிந்திக்க வைக்கும் அளவிற்கு அவர்கள் மன வேதனை அடைந்து விடுவார்கள்.
ஆதலால் இவர்கள் முடிந்தவரை யாருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதிக அளவில் ஈடுபாடு கொள்ளாமல் செய்வது நன்மை தரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |