2026: அள்ளிக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான்
ஜோதிடத்தில் புதன் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக அவர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அதாவது தற்பொழுது மகர ராசியில் இருக்கக்கூடிய புதன் பகவான் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கிறார்.
இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கம் உண்டானாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம் :
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்களுக்கு வங்கி ரீதியாக சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத அளவில் பண சேமிப்புகள் உண்டாகும். சமுதாயத்தில் அரசியல் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட கூடிய நிலை உருவாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டமானது ஒரு மிகப்பெரிய அளவில் நற்செய்தியை கொண்டு சேர்க்கப் போகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை பிறக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கக்கூடிய வேலையை சரியாக செய்து மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் பெறுவீர்கள். காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்த தடை யாவும் விலகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக மன மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கக்கூடிய காலம். நண்பர்கள் வட்டம் விரிவடையும். திடீர் பரிசுகளை பெறக்கூடிய காலமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |