தமிழ்நாட்டில் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் 3 முக்கிய கோவில்கள்
நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வாறு மன அமைதியும் பொருளாதார முன்னேற்றமும் அவசியமோ அதை போல் இறைவனுடைய அருளும் நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், நாம் இறைவன் வீற்றிருக்கக்கூடிய ஒவ்வொரு ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் தனி சிறப்பம்சங்களை காணப்படுகிறது.
அதாவது ஒவ்வொரு கோவில்களுக்கு செல்லும் பொழுது நம்முடைய கிரக நிலைகள் தூண்டப்பட்டு நேர்மறையான பலன்கள் நம் வாழ்க்கையில் நடப்பதை காணலாம். அந்த வகையில் ஒருவருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடிய மூன்று முக்கியமான கோவில்கள் பற்றி பார்ப்போம்.

1. திருகண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோவில்:
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்களில்இருக்கக்கூடிய இந்த ஆலயத்தில் மட்டும் தான் பெருமாள் அபய கரத்திற்கு பதிலாக தானம் தரும் கரத்துடன் காட்சி கொடுக்கிறார். இங்கு பெருமாள் பக்தர்களின் பாவங்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் தானமாக பெற்றுக்கொள்வதாக பக்தர்களுடைய நம்பிக்கை.
அந்த வகையில் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வழிபாடு செய்து வந்தாலே நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கர்ம வினைகள் துன்பம் பொருளாதார கஷ்டம் இவை எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
2. திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் :
சிவபெருமானின் அருளையும் விஷ்ணுவின் அருளையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய தலமாக இந்த ஆலயம் இருக்கிறத. அதாவது பெருமாள் சிவனின் ஆவுடை மீது நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் சொர்க்க வாசல் உடன் சேர்ந்து மூன்று வாசல்கள் இருக்கிறது.
அதனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் நேரடியாக மூலவரையே தரிசிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கிறது. முக்கியமாக ஹரியும் ஹரனும் ஒன்றே என்று உணர்த்தக்கூடிய அற்புதமான திருத்தலமாகும்.

3. திருச்சேறை ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவில்:
ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரக் கடனை நிவர்த்தி செய்து தரக்கூடிய அற்புதமான திருத்தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இங்கு 11 திங்கட்கிழமைகள் சென்று ஒருவர் வழிபாடு செய்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பணக்தடை நீண்ட கால பிரச்சனை நீங்கி அவர்கள் வீடுகளில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு உள்ள சிவன் ஒருவருடைய பிறவிப் பிணிகளை தீர்க்கக் கூடியவராக அருள் பாலிக்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |