வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலக வைக்க வேண்டிய கருப்பு நிற பொருட்கள்
வீட்டில் நேரம் சரி இல்லை என்றால் பல விதமான துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும்.எந்த விஷயம் செய்த்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்காது.தொழில் தடை,வியாபாரத்தில் நஷ்டம்,குழந்தைகள் ஆரோக்கிய குறைவு போன்ற நிகழ்வுகள் உண்டாகும்.
அப்படியாக ஜோதிட சாஸ்திரத்தில் இந்த எதிர்மறை ஆற்றலை விலக்க பல வழிமுறைகள் இருக்கிறது.இருந்தாலும் சில கருப்பு நிற பொருட்கள் வைப்பதால் நம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் முற்றிலுமாக விலகும்.
கருங்கல்:
இந்த கருங்கல் வீட்டில் வைப்பதால் பல மாற்றங்கள் நிகழ்கிறது.அதிலும் இந்த கருங்கல் வைக்கும் திசை பொறுத்து அதற்கான பலன் மாறுபடுகிறது.அதாவது கருங்கல்லை தவறான திசையில் வைக்கும் பொழுது எதிர்மறை ஆற்றல் ஈர்க்கிறது.அதுவே கருங்கல்லை அதற்கு உரிய திசையில் வைக்க நேர்மறை ஆற்றல் பெருகுகிறது.இத்தகைய சூழ்நிலையில் வீட்டின் தெற்கு திசையில் நீங்கள் கருங்கல்லை வைத்தால் எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படும்.
கருப்பு சட்டி:
ஒருவர் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகம் சூழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கிரக தோஷங்கள் தான் காரணம்.இதற்கு பலரும் பலவகையான பரிகாரங்கள் செய்வார்கள்.இருந்தாலும் ஒரு எளிய வழிமுறையாக உங்கள் வீட்டின் சமையலறையில் கருப்பு இரும்பு சட்டியை வைத்தால் இதன் மூலம் ஒன்பது கிரகங்களும் சாந்தமடைந்து,கிரக தோஷம் விலகும்.
கருப்பு சிலை:
வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ்கிறது என்றால் நீங்கள் கருப்பு நிறத்தில் சிலையை வையுங்கள்.இதற்கு எப்பேர்ப்பட்ட எதிர்மறை சக்தியையும் விரட்டும் சக்தி உண்டு.நீங்கள் வைக்கும் கருப்பு சிலையானது ஒரு மிருகத்தின் சிலையாக தான் இருக்க வேண்டும்.அவ்வாறு வைக்கும் பொழுது நிச்சயம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் எல்லாம் முற்றிலுமாக விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |