பிப்ரவரியில் பெருமாளின் முழு அருளை பெற்று பணக்கார யோகம் பெரும் 4 ராசிகள் யார்?

Report

மனிதனுக்கு வாழ்க்கையில் செல்வ வளம் கிடைக்க பெருமாளின் முழு அருள் கிடைக்க வேண்டும்.எவர் ஒருவருக்கு பெருமாளின் பரிபூர்ண அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.மேலும்,பிப்ரவரியில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை மிக சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

மேலும்,ஒருவர் ஜாதகத்தில் தோஷம் இருக்க அவர்கள் கட்டாயம் விஷ்ணுவை வழிபாடு செய்ய அவர்களுக்கு உண்டான தடங்கல் பரிபூர்ணமாக விலகும்.அதே சமயம் மனதார விஷ்ணுவை மனதார வழிபாடு செய்து மந்திரங்கள் சொல்வதாலும் பிறருக்கு தானம் செய்வதாலும் நம்முடைய வாழ்வில் சிறந்த மாற்றத்தை பெற முடியும்.

அப்படியாக பகவான் விஷ்ணு அனைத்து ராசிகளின் மீதும் தனது அருளைப் பொழிவார்,ஆனால் 5 ராசிகளின் மீது அவர் சிறப்பான அருளைக் கொண்டிருப்பார்.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

வீட்டில் பூஜை செய்யும் பொழுது நாம் செய்யக்கூடாது தவறுகள்

வீட்டில் பூஜை செய்யும் பொழுது நாம் செய்யக்கூடாது தவறுகள்

மேஷம்:

மேஷ ராசிக்கு விஷ்ணு பகவானின் அருளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம்.வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.சிலருக்கு சொத்து விவகாரத்தில் உண்டான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.இவர்கள் சனி கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்கு வழிபாடு செய்து வர வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காணலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு இந்த மாதம் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உருவாகும்.சிலர் குடும்பமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.கணவன் குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர்கள்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இந்த மாதம் வியாபாரத்தால் நல்ல முன்னேற்றம் கொடுக்கும் மாதம்.வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள்.புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் உங்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.தொழிலை விரிவு படுத்துவதை பற்றி சிந்தனை செய்வீர்கள்.இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் துளசி மாலை வாங்கி சாற்றி வழிபட்டு வர தடைகள் எல்லாம் விலகும்.

மீனம்:

பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு பெருமாளின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.இந்த மாதம் தொட்டது எல்லாம் வெற்றி ஆகும் மாதம்.சிலர் புனித யாத்திரை செல்லும் காலம் ஆகும்.வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவார்கள்.குடும்பத்தில் சந்தோசம் உருவாகும்.இவர்கள் தினமும் பெருமாள் மந்திரத்தை பாராயணம் செய்து வர துணிச்சல் பிறக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

      

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US