இந்த 3 கனவுகள் வந்தால் புறக்கணிக்காதீர்கள்.. பிரபஞ்சம் சொல்லும் செய்தியாக இருக்கலாம்..

By Sakthi Raj Aug 22, 2026 11:30 AM GMT
Report

 இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயமும் காரணம் காரியம் இல்லாமல் நடப்பதில்லை. அப்படியாக, ஒருவருக்கு கனவு வருகிறது என்றால் அது பல நேரங்களில் நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என்றாலும் அந்த கனவுகள் பிரபஞ்சத்தினால் நமக்கு அனுப்பக்கூடிய ஒரு செய்தியாக கூட இருக்கலாம். அப்படியாக, நமக்கு வரக்கூடிய இந்த மூன்று கனவுகளை மட்டும் எப்பொழுதும் புறக்கணிக்க கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

இந்த 3 கனவுகள் வந்தால் புறக்கணிக்காதீர்கள்.. பிரபஞ்சம் சொல்லும் செய்தியாக இருக்கலாம்.. | 3 Dreams We Should Never Ignore In Life

2026 செப்டம்பர்: வெற்றி மேல் வெற்றி பெறப்போகும் மகர ராசியினர்.. கட்டாயம் இது நடக்குமாம்

2026 செப்டம்பர்: வெற்றி மேல் வெற்றி பெறப்போகும் மகர ராசியினர்.. கட்டாயம் இது நடக்குமாம்

1. கீழே விழுவது போன்ற கனவு:

பலருக்கும் அடிக்கடி தங்களுடைய கனவுகளில் கீழே விழுவது போல் வருவதை பார்க்கலாம். அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மன அழுத்தம் அல்லது நிறைவேறாத ஆசைகள் பயம் காரணமாக இவ்வாறான கனவுகள் வருகிறது.

கனவுகள் வரும் பொழுது அந்த பயத்தை போக்கி நாம் அதனுடன் போராடி முன்னேறி செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலாக காணப்படுகிறது. எதையும் எப்பொழுதும் இறுக்கமாக பற்றிக்கொள்வதால் பிரச்சனை இன்னும் பெரிதாக தான் செய்யும். அதனால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு முன்னேறி செல்ல வேண்டும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. யாரோ துரத்துவது போன்ற கனவு:

அதேபோல், யாராவது கனவில் துரத்துவது போல் வருவதை கண்டால் மறுநாள் நிச்சயம் நமக்கு ஒரு பயம் வந்துவிடும். ஆக, இந்த கனவு நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் புறக்கணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதாவது, பிரச்சனை வருகிறது என்றால் அதை தைரியமாக சமாளிக்க கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவை நமக்கு உணர்த்துகிறது.

இந்த 3 கனவுகள் வந்தால் புறக்கணிக்காதீர்கள்.. பிரபஞ்சம் சொல்லும் செய்தியாக இருக்கலாம்.. | 3 Dreams We Should Never Ignore In Life 

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

3. பற்கள் விழுவது போன்ற கனவு:

கனவில் பற்கள் கீழே விழுவது போல் வரும் பொழுது கட்டாயம் நமக்கு ஒரு பயத்தை கொடுக்கலாம். அந்த வகையில், நாம் அந்த நேரத்தில் தன்னம்பிக்கை இழந்தும் பிறருடைய மதிப்பை எதிர்பார்த்தும் வாழ்கின்றோம் அதை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலை அவை நமக்கு சொல்கிறது. ஆக, எதற்கும் பயப்படாமல் யாருடைய அங்கீகாரம் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் நிச்சயம் முன்னேறி செல்லலாம் என்று அவை நமக்கு அறிவுறுத்துகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US