சிவபெருமானுடைய கோபத்தில் இருந்து தப்பிக்கவே முடியாத 8 பாவங்கள் என்ன தெரியுமா ?
சிவபெருமான் கருணை கடவுள் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கோபமும் வருகிறது. அந்த வகையில், ஒரு மனிதர் இந்த 12 பாவங்களை செய்தால் அவர்கள் சிவபெருமானுடைய கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாதாம். அந்த வகையில், அந்த 12 பாவங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
1. அடுத்தவரின் மனைவி அல்லது கணவன் மீது ஆசைப்படுவது பெரிய பாவம் ஆகும்.
2. அதேபோல், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களுடைய சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மிகப் பெரிய அளவில் பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.
3. ஒருவருடைய சுயநலத்திற்காக எளியவர்களின் கனவையோ வாழ்க்கையோ அழிப்பது அல்லது அவர்கள் மீது வீண் பழி சுமத்துவது சிவபெருமானுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. அவர்களால் அந்த பாவத்திலிருந்து தப்பிக்கவே முடியாது.
4.ஒருவர் தீய வழியில் தொடர்ந்து செல்வது அல்லது ஒருவருக்கு சிறிதளவு கூட நன்மையை செய்யாமல் இருப்பது இந்த இரண்டும் சிவபெருமானுடைய கோபத்திற்கு ஆளாக்கக்கூடும்.

5. கர்ப்பிணிகளிடம் மிக மோசமாக நடந்து கொள்வது அல்லது அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவது மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் மிகப் பெரிய பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.
6.இன்னொருவர் மீது தேவையில்லாத பொய் சொல்லி வீழ்த்துவது தப்பிக்கவே முடியாத பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.
7. ஒருவருடைய செய்கையால் ஒருவருடைய வாழ்க்கை நாசமானால் அது மிகப் பெரிய பாவமாகும். அதிலிருந்தும் அவர்கள் தப்பிக்கவே முடியாது.
8. ஒருவரை கொலை செய்வது அழிப்பது போன்றவையும் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வாங்கி கொடுக்கும்.