இந்த 3 ராசிகளுக்கு எப்பொழுதும் சனி பகவானுடைய அருள் இருக்குமாம்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அந்த ஒன்பது கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒவ்வொரு கிரகங்களும் நமக்கு தேவையானதை கொடுக்கிறது, ஆனால் சனி பகவான் மட்டும் தான் நமக்கு எது தேவை இல்லையோ அதை எடுத்துக் கொள்கிறார். அதாவது ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாத ஆணவம் அகங்காரம் இவை எல்லாம் சனி பகவானால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அப்படியாக சனி பகவான் என்றாலே எல்லாருக்கும் அச்சம் உண்டு. இருந்தாலும் சனி பகவானுக்கு என்று பிடித்த குறிப்பிட்டு சில ராசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சனி பகவான் அவ்வளவு எளிதாக பெரிய கஷ்டங்கள் கொடுப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மகரம்:
சனி பகவான் சொந்த வீடான மகரம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் சனி பகவானுடைய நற்பார்வையிலேயே இருக்கிறார்கள். இவர்களுக்கு சனி பகவான் பல வகையான நெருக்கடிகள் கொடுக்கலாம் பலவகையான சோதனைகள் கொடுக்கலாம் ஆனால் அதை அவர்கள் முழுமையாக உணர விடாமல் எப்பொழுதும் தற்காத்துக் கொண்டே இருப்பார். இவர்கள் வாழ்க்கையில் சவால்களை சந்திப்பார்கள் ஆனால் வீழ்ந்து போக மாட்டார்கள். காரணம் சனி பகவான் உடைய பார்வை இவர்களுக்கு எப்பொழுது உண்டு.
கும்பம்:
சனி பகவானுடைய சொந்த ராசி கும்ப ராசி அதனால்தான் கும்ப ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் மிகவும் உழைப்பாளியாக இருப்பார்கள். இவர்களிடம் அவ்வளவு எளிதாக சோம்பேறித்தனத்தை நாம் பார்த்திட முடியாது. ஏதேனும் ஒரு வேலையை இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். உழைப்பால் முன்னேறக் கூடிய ராசியினர் கும்ப ராசிக்காரர். இவர்களுக்கு துன்பம் வரலாம் கஷ்ட காலங்கள் வரலாம் ஆனால் சனி பகவான் இவர்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். இந்த ராசியில் பிறந்தவர்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல மதிப்போடு இருப்பார்கள்.
துலாம்:
சனி பகவானுடைய உச்ச வீடு துலாம் ராசி என்பதால் துலாம் ராசிக்காரர்கள் இயல்பாகவே நீதிமானாக விளங்குகிறார்கள். ஒரு பொழுதும் பாதை தவறி செல்வதில்லை. சனி அருளால் இவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்போடும் பெயரோடும் வாழக்கூடியவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். தான் ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்றால் அதற்காக நான் எவ்வளவு முயற்சியும் செய்வார்கள். எளிதாக கிடைக்கக்கூடிய விஷயத்தை இவர்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







