காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம்

By Sakthi Raj Jul 22, 2026 12:23 PM GMT
Report

காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம் நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு உணவு வைக்கக்கூடிய பழக்கம் இருக்கிறது. காகத்திற்கு உணவு வைப்பதை என்பது நமக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறது.

நம்மால் ஒரு ஜீவன் பசி நீங்குகிறது என்பதை கடந்து நமக்கு சனி பகவானால் ஏற்படுகின்ற தாக்கங்கள் மற்றும் நாம் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி பிறக்கிறது. அதனால்தான் நம்முடைய வீடுகளில் இன்றளவும் தினமும் மறக்காமல் காகத்திற்கு உணவு வைத்து வருகின்றோம்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்

அந்த வகையில், தினமும் காகத்திற்கு உணவு வைக்கின்ற பொழுது உலர் திராட்சை வைத்து வந்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த எப்பேர்பட்ட பாவங்களும் விலகி புண்ணியம் வந்து சேர்வதாக சொல்லப்படுகிறது.

காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம் | 3 Foods Give To Crows Daily Will Remove Hardship

கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான 9 சகுனங்கள்

கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான 9 சகுனங்கள்

இதனால் நம்முடைய கஷ்டங்கள் யாவும் தீர்ந்து ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கிறது. அதை போல், காகம் சனி பகவானுடைய வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு சாதம் வைக்கின்ற பொழுது அதனுடன் எள் சேர்த்து வைத்தால் சனி பகவானுடைய முழு அருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதனால் நமக்கு சனி திசை மற்றும் ஏழரை போன்ற காலகட்டங்களில் பாதிப்புகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. அதனுடன் காகத்திற்கு சாதம் வைக்கின்ற பொழுது அதனுடன் நல்லெண்ணெய் கலந்து வைத்தால் சனியின் உடைய பார்வையினால் தீமை முழுவதுமாக குறையும் என்று சொல்லப்படுகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US