கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான 9 சகுனங்கள்
நாம் கோவில்களில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது உண்டு. அப்படியாக, நாம் தேங்காய் உடைக்கின்ற பொழுது தேங்காய் சிதறுகின்ற எண்ணிக்கையை கொண்டு சில சகுனங்கள் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தேங்காய் உடைக்கும் போது நமக்கு சகுனம் சொல்வது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. தேங்காய் முடிப்பாகம் சிறியதாக வட்டமாக உடைந்தால் நமக்கு செல்வம் அதிக அளவில் வந்து சேருமாம்.
2. அதைப்போல், ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் நமக்கு அழியாத செல்வம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
3. தேங்காய் சரிசமமாக உடைந்தால் துன்பம் தீர்ந்து விரைவில் செல்வம் சேருமாம்.
4. அதுவே தேங்காய் மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் திடீர் சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்குமாம்.
5. ஆனால், தேங்காய் ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் என்று சொல்லப்படுகிறது.

6. நாம் தேங்காய் உடைக்கும் பொழுது கைப்பிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரக்கூடும் என்று சொல்கிறார்கள்.
7. தேங்காய் முடிப்பாகம் இரு கூறானால் சில பொருட்செய்தம் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது.
8. தேங்காய் சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகுமாம்.
9. ஆலயத்தில் நாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கின்ற சத்தம் கேட்கிறது என்றால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |