சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பால் போல் வலிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். இந்த தகவலை கேட்ட சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் பால் போல் மாறி வழிந்து ஓடியது.
இந்த காட்சி எல்லோரையும் மெய் சிலிர்க்க செய்தது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காட்டுத் தியாக பரவிய நிலையில் இந்த அற்புதத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

எண்ணெய் பால் போல் வலிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இருப்பினும் இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து அறிவியல் ரீதியாக எந்த ஒரு விளக்கமும் அல்லது அரசு தரப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிகழ்வை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற நேரத்தில் ஒரு சிலர் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இருப்பினும் பக்தர்கள் இது தெய்வீக அதிசயமாக கருதி சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |