வாஸ்து: நீங்கள் கோடீஸ்வரர் ஆக வீடுகளில் இருக்க வேண்டிய 3 முக்கிய சிலைகள்
வீடுகளில் நாம் மகிழ்ச்சி செல்வம் நிம்மதி இவை எல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆசை கொள்வோம். ஆனால் திடீர் என்று தொடர்ந்து பிரச்சினை பொருளாதார இழப்பு, ஆரோக்கியத்தில் குறைபாடு என்று அடுத்தடுத்து ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.
இதற்கெல்லாம் கிரகங்களுடைய பாதிப்புகள் ஒரு காரணமாக இருந்தாலும் வீடுகளில் வாஸ்து ரீதியாக ஏதேனும் ஒரு சிக்கல் இருந்தாலும் இவ்வாறான பிரச்சனை வரும். அப்படியாக வீடுகளில் இருக்கக்கூடிய தீய ஆற்றல் விளங்கி நிம்மதியும் நிலையான செல்வமும் கிடைக்க வைத்திருக்க வேண்டிய மூன்று முக்கியமான சிலைகள் பற்றி பார்ப்போம்.

1. இந்து மதத்தில் காமதேனு பசு நம்முடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி கொடுப்பதாக கருதப்படுகிறது. ஆதலால், வீடுகளில் வடக்கிழக்கு மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைப்பதால் பண பற்றாக்குறை உண்டாகாது. அதே சமயம் வீடுகளில் மகிழ்ச்சி, செல்வம், அமைதி போன்றவை நிலையானதாக இருக்கும்.
2. தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஆமையை வைப்பதும் நமக்கு ஒரு நல்ல பலன் கொடுக்கும். இந்து மதத்தில் ஆமை விஷ்ணு பகவானின் கூர்ம அவதாரமாகும். அதனால் வீட்டில் வடக்கு திசையில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஆமையை வைத்திருப்பது நமக்கு நல்ல செல்வ செழிப்பை உண்டு செய்யும். தண்ணீரில் உலோக ஆமையை வைப்பது நமக்கு பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொடுக்கும்.
3. வீடுகளில் யானை சிலை வைத்திருப்பது என்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இவை நம் குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வம் மற்றும் குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |