சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்
கல்விக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் சரஸ்வதி தேவி .மேலும் மலைமகள், அலை மகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் கொண்டாடும் விழா தான் நவராத்திரி ஆகும். இந்த விழா இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாட கூடிய ஒரு நிகழ்வாகும்.
இதில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை வழங்கும் துர்க்கை அன்னையையும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வழங்க கூடிய லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் கல்வி கலைகளை ஆசீர்வதிக்கும் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்வோம். இதில் சரஸ்வதி பூஜை நவராத்திரியில் ஒன்பதாவது நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்காக தங்களுடைய புத்தகங்கள் மற்றும் தங்களுடைய படிப்பிற்கு உதவும் பொருட்களை பூஜை அறையில் வைத்து அன்னையிடம் மென்மேலும் வளர வேண்டும் என்று வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஒரு மனிதனுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த கல்வியில் நாம் சிறந்து விளங்குவதற்கு நமக்கு எவ்வளவு பெரிய அறிவாற்றல் இருந்தாலும் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே நாம் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். அப்படியாக சரஸ்வதி பூஜை அன்று நாம் வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
புத்திக்கூர்மை அதிகரிக்க:
யாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யாஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர்,தேவைஸ் ஸதாபூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா
நினைவாற்றல் பெருகி, வெற்றி கிடைக்க:
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
சகல கலைகளையும் அளிக்கும் சரஸ்வதி காயத்ரி:
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







