உலகில் மிகவும் கடினமான விரதம் எது தெரியுமா?
இறை வழிபாடு என்பது நம் மனதையும் உடலையும் மேன்மைப்படுத்த கூடிய ஒரு அற்புதமான விஷயம் ஆகும். அப்படியாக பலரும் இறை வழிபாட்டின் பொழுது சமயங்களில் விரதம் கடைப்பிடித்து அவர்களுடைய பிரார்த்தனை செய்வார்கள். மேலும் விரதங்களில் பல விரதங்கள் இருக்கிறது. அதில் உலகத்தில் மிகவும் கடினமான விரதம் என்று ஒரு விரதம் இருப்பதாகவும் அந்த விரதத்தை மேற்கொள்வது மிகவும் கஷ்டம் என்றும் சொல்கிறார்கள். அவை என்ன விரதம் என்று பார்ப்போம்.
பொதுவாக விரதத்தின் பொழுது சிலர் தண்ணீர் பழங்கள் ஒருவேளை உணவு எடுத்துக் கொண்டு விரதம் கடைப்பிடிப்பார்கள். ஒரு சிலர் அசைவம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை மேற்கொள்வார்கள். இவ்வாறாக தங்களுக்கு ஏற்றது போல் விரதம் கடைபிடித்து வழிபாடு செய்வார்கள்.
ஆனால் விரதங்களில் கடினமான விரதமாக சமண மதத்துடன் தொடர்பு கொண்ட சல்லேகனா அல்லது சந்தார விரதம் என்று சொல்கிறார்கள். சமண மதத்தில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மிகவும் எளிமையான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றி வாழக்கூடியவர்கள்.
இவர்கள் வாழும் வாழ்க்கை பலருக்கும் மிகவும் கடினமான ஒன்றாக தோற்றமளிக்கும். இவர்கள் தரையில் தான் தூங்குவார்கள். எப்பொழுதும் செருப்பு இல்லாமல் நடப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதற்கு கூட தட்டுகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்துவதில்லை.
அப்படியாக சல்லேகனா விரதத்தின் பொழுது சிலர் சில மாதங்கள் வரை உணவுகள் மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக சில வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கொண்டோம் என்றால் 68 நாட்கள் முதல் 423 நாட்கள் வரை தண்ணீர் மட்டுமே அருந்தி இந்த விரதத்தை கடைபிடிப்பதாக சொல்கிறார்கள்.
இந்த விரதமானது தன் உடலை தானாக முன்வந்து துறக்கும் ஒரு செயல்முறையாக கருதப்படுகிறது. ஆன்மீக கண்ணோட்டத்தில் இதை பார்க்கும் பொழுது உடல் அதனை கடமையை நிறைவேற்றிய பிறகு முக்தியை நோக்கிய படியை எடுத்து வைப்பதாக செல்கிறார்கள்.
இந்த விரதம் என்பது கடினமான ஒரு உண்ணாவிரதம் மட்டுமல்லாமல் பல துன்பம் வலி சோதனை போராட்டம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த விரதத்திற்கு மிக மிக முக்கியமாக சுய ஒழுக்கமும் பகுத்தறிவு ஆன்மீக பலம் தேவைப்படுகிறது. இந்த விரதம் நமக்கு மாயை உலகில் பற்றற்று வாழக்கூடிய ஒரு பலத்தை நமக்கு கொடுக்கக் கூடியதாக நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







