தவறியும் இந்த 3 பொருட்களை தானம் செய்யாதீர்கள்- பொருளாதார இழப்பு உண்டாகுமாம்
இந்து மதத்தில் தானம் என்பது ஒரு மிகச்சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுகிறது. அதாவது தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம் தானம் செய்வதால் கரைந்து போகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் நாம் ஒரு சிறு குறிப்பிட்ட சில பொருட்களை தானம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.
அவ்வாறு தானம் செய்யும் பொழுது நமக்கு பொருளாதார இழப்புகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம். உண்மையாகவே ஒரு மனிதனுக்கு புண்ணியம் சேர வேண்டும் என்றால் அவன் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவருடைய தேவையை புரிந்து கொண்டு தானம் செய்வதால் மட்டுமே வரக்கூடியது ஆகும்.
இவ்வாறு தானம் செய்வது அவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு நன்மை அளிப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக நாம் என்ன தானம் செய்ய வேண்டும்? என்ன தானம் செய்ய கூடாது என்றும் பார்ப்போம்.
1. மஞ்சள் தானம் - வீடுகளில் சுப காரியங்கள் உண்டாக மஞ்சள் தானம் செய்யலாம்
2. பூமி தானம் – சந்திக்கும் கஷ்டங்கள் யாவும் விலகும்
3. வஸ்த்ர தானம் - ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும்
4. கோ தானம் - பித்ரு சாப நிவர்த்தி, இல்லத்தில் தோஷங்கள் விலகும் ,பலவித பூஜைகள் செய்த பலன்கள் கிடைக்கும்.
5. தில (எள்) தானம் - சனிபகவானின் தாக்கம் குறைந்து நன்மை உண்டாகும்
6. குல (வெல்லம்) தானம்- தலைமுறையினர் செழிப்பாக வாழ்வார்கள்
7. நெய் தானம் –வீடு, பேறு அடையலாம். 8. தேன் தானம் - மகிழ்ச்சி அதிகரிக்கும்
9. வெள்ளி தானம் - பித்ருக்கள் ஆசி கிடைக்கும்.
10. சொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.
11. தண்ணீர் தானம் - மனதில் நிம்மதி பிறக்கும்
12. கம்பளி தானம் – துர்சொப்பன, துர்சகுன பய நிவர்த்தி உண்டாகும்.
13. பால் தானம் – சகல சௌபாக்கியம் ஏற்படும்.
14. சந்தனக்கட்டை தானம் – புகழ் உண்டாகும்.
15. அன்னதானம் - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஆக ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஆனால் நாம் கூர்மையான பொருட்களான கத்தி கடப்பாரை ஊசி போன்றவற்றை பிறருக்கு எப்பொழுதும் தானமாகவும் இலவசமாகவும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள்.
இவை நம் வீடுகளில் பொருளாதார இழப்பை உண்டாக்கும். அதைப்போல் வீடுகளில் பழைய உணவுகளையும் நாம் பிறருக்கு கொடுக்கக் கூடாது என்கிறார்கள். இவை நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியை குறைக்கக்கூடும். வீடுகளில் பயன் படுத்தும் துடைப்பம் இவற்றையும் நாம் பிறருக்கு தனமாக வழங்கக்கூடாது. இவை மன கசப்புகளை உண்டு செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







