திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து கொடுக்கக்கூடாத 3 பொருட்கள்
திருமணமான பெண்களுக்கு பெண் வீட்டார் பரிசு பொருட்கள் கொடுப்பது இயல்பானது. அப்படியாக, வாஸ்து ரீதியாகவும் ஜோதிட சாஸ்திரமாகவும் நாம் திருமணமான நம் வீட்டு பெண்களுக்கு சில பொருட்களை கொடுக்க கூடாது என்று சொல்லப்படுகிறது.
அவ்வாறு கொடுப்பதனால் சில துன்பங்கள் மற்றும் பிரச்சன்னைகள் சந்திக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
கருப்பு உடைகள்:
கருப்பு நிறம் ஜோதிடத்தில் எதிர்மறை சக்திகளை கொண்டதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில் அவர்கள் வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் அதில் கருப்பு நிற ஆடையை பயன் படுத்தமாட்டார்கள்.
ஆக, திருமணமான பெண் பிள்ளைகளுக்கு கருப்பு நிற ஆடையை ஒரு பொழுதும் பரிசாக கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பொழுது பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் சில பிரச்சன்னைகள் சந்திக்கக்கூடும். அதற்கு பதிலாக மங்களகரமான ஆடைகளை பரிசாக கொடுப்பது நன்மை அளிக்கும்.
கண்ணாடி பொருட்கள்:
திருமணமான பெண்களுக்கு கண்ணாடி பொருட்கள் பரிசாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பொழுது அவர்களுக்கு நிதி பிரச்சனைகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. காரணம், கண்ணாடி பொருட்கள் எளிதில் உடையக்கூடிய பொருள் ஆகும். இதனால் உறவுகளில் விரிசல் மற்றும் நிதி பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
ஊறுகாய்:
சிலர் தாய் வீட்டில் இருந்து பெண்கள் ஊறுகாய் செய்து எடுத்து செல்வார்கள். ஊறுகாய் காரமாகவும், புளிப்பாகவும் இருப்பதால் அவை நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுப்பதால் திருமண வாழ்க்கையில் பதட்டத்தை அதிகரிக்கும்.
மேலும், ஊறுகாய் கொடுப்பதால் திருமணமான பெண் வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்று சொல்லப்படுவதால் அதை மறந்தும் கொடுப்பதை தவிர்ப்பது மகிழ்ச்சியான வாழ்க்கை வழங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |