2026: பிப்ரவரி மாதம் இந்த ராசிகள் பொருளாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் கிரகங்கள் தங்களுடைய இடத்தை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு சில ராசிகளுக்கு மிகவும் நெருக்கடியான சூழல் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் தேவை இல்லாத குழப்பங்கள், வாக்குவாதங்கள், தொழிலில் பிரச்சனை வண்டி வாகனத்தில் பிரச்சனை போன்ற சில சிக்கல்களை சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் எந்த ராசியினர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் 2026 பிப்ரவரி மாதம் ஒரு சில மனக்கசப்புகளை சந்திக்க போகிறார்கள். பழைய சொத்துகளில் இருந்து வந்த வழக்குகள் இன்னும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ரீதியாக சில சிக்கலையும் மன வருத்தங்களையும் சந்திக்ககூடும். யாரிடமும் தேவை இல்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் பிப்ரவரி மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொள்ள நேரலாம். வண்டி வாகனங்கள் செல்லும் பொழுது கவனமாக இருங்கள. வழக்கு விஷயங்களில் சில குழப்பங்களும் மன அழுத்தங்களும் பதட்டமும் உண்டாகலாம். ஒரு சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த பிப்ரவரி மாதம் குடும்ப ரீதியாக நிறைய வாக்குவாதங்களை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் ரீதியாக அதிக அளவில் உங்களுக்கு வேலை நெருக்கடிகள் உருவாகும். தேவை இல்லாமல் யாரிடமும் கடன் வாங்குவதை கொடுப்பதையும் தவிர்த்து விடுங்கள். பெற்றோர்கள் உடல் நிலையில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்:
இந்த மூன்று ராசியினரும் இவர்களுடைய பொருளாதார நெருக்கடிகள் இருந்து விடுபட தினமும் இறைவழிபாடு செய்வதும் மந்திரங்களை பாராயணம் செய்வது மட்டுமே இவர்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |