2026: சனிப்பெயர்ச்சியில் இருந்து விடுபட 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
நவகிரகங்களில் சனி பகவான் என்றால் எல்லாருக்கும் பயம் வந்துவிடும். ஆனால் உண்மையில் சனி பகவான் நாம் அச்சப்படும் அளவிற்கு எந்த தீங்கும் நமக்கு செய்ய மாட்டார். அவர் செய்யக்கூடிய தீமையும் நமக்கு ஒரு நன்மையாகவே இறுதியில் முடியும்.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியில் இருந்து விடுபட 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு விரைய சனி நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் இவர்கள் இரும்பு விளக்கு தீபம் போட்டால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு லாப சனி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் நன்மை உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு கர்ம சனி நடக்கிறது அதனால் இவர்களும் இரும்பு விளக்கு தீபம் ஏற்றலாம்.
கடகம்:
கடக ராசிக்கு பாக்கிய சனி நடப்பதால் இவர்களும் தவறாமல் நல்லெண்ணெய் குளியல் எடுத்தால் நிச்சயம் மாற்றம் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மறவாமல் காக்கைக்கு எள் சாதம் படைத்தால் தடைகள் யாவும் விலகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு கண்டக சனி நடக்கிறது. ஆதலால் இவர்கள் காலை நேரங்களில் காக்கைக்கு எள் சாதம் படைத்தால் நிச்சயம் வெற்றி உண்டு.

துலாம்:
துலாம் ராசிக்கு யோக சனி நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் இவர்கள் செருப்பு தானம் செய்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு பஞ்சமி சனி நடக்கிறது ஆதலால் இவர்களும் தவறாமல் நல்லெண்ணெய் குளியல் செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டமா சனி நடக்கிறது. இவர்கள் பயபக்தியோடு காக்கைக்கு எள் கலந்து சாதம் படைத்தால் தீய பலன்கள் குறையும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு பாத சனி நடக்கிறது. இவர்கள் செருப்பு தானம் செய்தால் பண இழப்புகள் குறையும்.
மீனம்:
மீன ராசிக்கு ஜென்ம சனி நடக்கிறது. தினமும் சாதத்திற்கு எள் கலந்து படைத்தால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |