சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றமும் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் ஜோதிடத்தில் சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதன் அனுபவிக்க கூடிய இன்பத்திற்கு முழு காரணமாக இருக்கக்கூடியவர் சுக்கிரன்.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கிறது, அதில் சுக்கிர பகவான் சதய நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். இந்த மாற்றம் குறிப்பிட சில ராசிகளுக்கு நல்ல விளைவுகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்களை கொடுக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் இந்த காலகட்டங்களில் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் சேமிப்பும் சிக்கனமும் அவசியம். உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் சில இடங்களில் விட்டு கொடுப்பது அவசியம்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை உண்டு செய்ய போகிறது. எதிர்பாராத வாகன பழு நீங்கள் சந்திக்கலாம். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். வழக்கு விஷயங்களில் கவனமாக கையாள வேண்டும். தேவை இல்லாமல் இந்த காலகட்டங்களில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். முகம் தெரியாத நபரிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். தொழில் ரீதியாக நீங்கள் நிதானமாக கையாள வேண்டியது அவசியமாக இருக்கிறது. மன நிலையில் நிறைய குழப்பங்களும் பதட்டங்களும் உண்டாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று பயணத்திற்கு திட்டமிட்டு இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |