இந்த ஒரு பொருள் உங்கள் பர்ஸில் இருந்தால் கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்

By Sakthi Raj Feb 19, 2026 08:17 AM GMT
Report

மனிதர்களுடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அப்படியாக நம்முடைய மணி பர்ஸில் எப்பொழுதும் பணம் நிரம்பி இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசை கொள்வார்கள். ஆனால் கால சூழ்நிலையால் பலருக்கும் கைகளில் பணம் தங்குவதில்லை. என்னதான் ஒரு பக்கம் பணம் வந்து கொண்டே இருந்தாலும், மறுபக்கம் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும்.

அப்படியாக, நம்முடைய பண பிரச்சினைகள் தீரவும் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை அடையவும் வாஸ்து ரீதியாக நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம். நம்முடைய பர்ஸில் பணம் எப்பொழுதும் குறையாமல் இருப்பதற்கு ஒரு சிறிய துண்டு சிவப்பு நிற காகிதத்தை வைத்துக் கொள்ளலாம்.

இந்த ஒரு பொருள் உங்கள் பர்ஸில் இருந்தால் கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டாகுமாம் | How To Attract Wealth And Reduce Money Spending

வாஸ்து: இந்த 6 பொருட்களை மற்றவரிடம் வாங்கினால் பொருளாதார இழப்பு உண்டாகுமாம்

வாஸ்து: இந்த 6 பொருட்களை மற்றவரிடம் வாங்கினால் பொருளாதார இழப்பு உண்டாகுமாம்

அதாவது சிவப்பு நிறம் என்பது நெருப்பு உடன் தொடர்புடைய நிறமாகும். இது நமக்கு தடைப்பட்டு இருக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்ப்பதற்கு உதவக் கூடியதாக அமையும். அதனால் சிவப்பு நிற காகிதத்தை நம் பர்ஸில் வைத்துக் கொள்ளும் பொழுது பணம் பற்றாக்குறை இல்லாமல் எப்பொழுதும் நம்மை வந்து சேரும்.

மேலும் இந்த சிவப்பு நிற காகிதத்தை நம்முடைய பர்ஸில் வைக்கும் பொழுது நிச்சயம் நமக்கு ஒரு கட்டுப்பாட்டை அவை கொடுத்து, ஆடம்பர செலவுகளை தவிர்க்க அவை உதவுகிறது. குறிப்பாக வீன் செலவுகளை குறைக்க நமக்கு உதவியாக அமைகிறது.

மந்திரங்களை தவறாக பாராயணம் செய்தால் என்ன நடக்கும்?

மந்திரங்களை தவறாக பாராயணம் செய்தால் என்ன நடக்கும்?

மேலும் ஒவ்வொரு முறையும் நாம் பண தேவைக்காக பர்ஸினை திறந்து பார்க்கும் பொழுது நமக்கு ஒரு வகை எச்சரிக்கை தன்மை கிடைக்கிறது. காரணம் சிவப்பு நிறம் என்பது நம்முடைய நம்பிக்கை மற்றும் ஆற்றலை குறிக்கக் கூடியதாக இருப்பதால் நம்மை பாதுகாப்பாகவும் கட்டுப்பாடாக செயல்படவும் அவை உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் நமக்கு மன பலத்தையும் அவை கொடுக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US