வாஸ்து: இந்த 6 பொருட்களை மற்றவரிடம் வாங்கினால் பொருளாதார இழப்பு உண்டாகுமாம்

By Sakthi Raj Feb 18, 2026 10:00 AM GMT
Report

வாஸ்து என்பது நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக, வாஸ்து தோஷம் ஒருவர் வீட்டில் இருக்கிறது என்றால் நிச்சயமாக அங்கு இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷத்தை எதிர்பார்க்கவே முடியாது.

அதனால் கட்டாயமாக வீடுகளை வாஸ்து ரீதியாக பார்த்து அமைப்பதும், வாஸ்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் வாஸ்துரீதியாக குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்களை மற்றவர்கள் வீடுகளில் இருந்து நாம் எடுத்து வரக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதனை பற்றி பார்ப்போம்.

வாஸ்து: இந்த 6 பொருட்களை மற்றவரிடம் வாங்கினால் பொருளாதார இழப்பு உண்டாகுமாம் | 6 Things We Shouldnt Borrow From Others Home

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

 

1. ஒருவர் வீடுகளில் இருந்து பழைய நாற்காலிகள், மரச்சாமான்கள் போன்றவை எடுத்து வருவதை தவிர்த்து விட வேண்டும். வேறு வழியின்றி அந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தக்கூடிய நிலை இருந்தால் கட்டாயமாக அதை நன்றாக தண்ணீர் விட்டு கழுவி அதற்கு சாம்பிராணி தூபம் காண்பித்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

2. தவறியும் ஒருவர் பயன்படுத்திய காலணிகளை பயன்படுத்தாதீர்கள். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது மனநிலையில் ஒரு சில தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

3. ஒருவர் வீடுகளிலிருந்து காலியான கிண்ணங்கள் போன்றவை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது பொருளாதார இழப்புகளை பெற்றுக் கொடுக்கும்.

வாஸ்து: இந்த 6 பொருட்களை மற்றவரிடம் வாங்கினால் பொருளாதார இழப்பு உண்டாகுமாம் | 6 Things We Shouldnt Borrow From Others Home 

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

4. ஒருவரிடம் இருந்து நாம் ஊசி, நூல் கத்திரிக்கோல் ஆகியவை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது நம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை உண்டு செய்யும்.

5. அதேபோல் இரும்பு தொடர்பான பொருட்களையும் நாம் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். இதனால் சனி தோஷம் அல்லது நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்தை தடுக்ககூடும்.

7. ஒருவரிடம் கொடை வாங்குவதையும் தவிர்த்து விட வேண்டும். அவசர தேவைக்காக வாங்கினாலும் அதை உடனடியாக அவர்களிடம் பயன்படுத்திய பிறகு கொடுத்து விடுவது நன்மையை அளிக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US