மார்ச் 15க்கு பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. ஏன் தெரியுமா ?

By Sakthi Raj Mar 08, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரகங்கள் நிறைய மாற்றங்களை செய்ய இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து  'த்வித்வாதஷ் யோகம்' உருவாகிறது.

இந்த இரண்டு கிரகங்களும் நெருப்பு கிரகம் என்பதால் இவற்றின் நிலை வளிமண்டலத்திலும் மனித வாழ்க்கையிலும் சில தாக்கத்தை உண்டு செய்யலாம். குறிப்பாக 2026 மார்ச் 15 அன்று சூரியன் மீன ராசியில் நுழைகிறார். செவ்வாய் அதே ராசியில் இருப்பதால் மூன்று ராசிகள் மார்ச் 20 ஆம் தேதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மார்ச் 15க்கு பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. ஏன் தெரியுமா ? | 3 Zodiac Must Be Carefull After March 15 2026

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்படும் அதிசய கோவில்

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்படும் அதிசய கோவில்

கன்னி:

கன்னி ராசியினர் இந்த காலகட்டங்களில் ஒருவரிடம் பேசும் பொழுது அவர்களுடைய வார்த்தைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணை மற்றும் பெற்றோர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். குறிப்பாக தாயின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

துலாம் ராசியினர் இந்த காலகட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் இந்த நேரத்தில் நம்ப வேண்டாம். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவை கவனமாக கையாள்வது அவசியம். வேலையில் உங்களுடைய பெயருக்கு சில களங்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2026: குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

2026: குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

மீனம்:

மீன ராசியினர் இந்த காலகட்டங்களில் கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் அவசியமாக இருக்கிறது. அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். தொழில் ரீதியாக எடுக்கின்ற முடிவுகளில் சில பின் விளைவுகள் வரலாம். மிகுந்த கவனம் வேண்டும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US