2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மே மாதத்தில் ரிஷப ராசியில் சூரிய பகவான் உச்சமாக இருப்பார். அப்படியாக சூரியனுக்கு அருகில் சுக்கிர பகவான் வரும் பொழுது அவர் அஸ்தமன நிலையை அடைகிறார். அப்படியாக சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுக்கு ஆடம்பரம் மற்றும் செல்வத்திற்கு காரணியாக இருக்கிறார்.
சூரிய பகவானின் வெப்பத்தால் சுக்கிர பகவான் அவருடைய பலத்தை இழக்கும் பொழுது ஒரு சில ராசிகளுக்கு தேவையில்லாத குழப்பங்களையும் மன அழுத்தத்தையும் கொடுக்ககூடும். அதேபோல், செவ்வாய் பகவானுடன் மீன ராசி இணைய இருக்கிறதால் அங்காரக தோஷத்தையும் இவை ஏற்படுகிறது.
இதன் காரணமாக மே மாதம் இறுதியில் ஒரு சில ராசிகள் மிகவும் பதற்றமாக காணப்படலாம். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
மே மாதம் இறுதியில் ரிஷப ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு சுக்கிரனின் அஸ்தமனம் மற்றும் அங்காரக தோஷத்தினால் இவர்களுக்கு தேவையற்ற கோபம், உடலில் பிரச்சினை, உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்கலாம் கணவன் மனைவி இடையே வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இவர்கள் இந்த காலகட்டங்களில் மகாலட்சுமி தேவி தாயாருக்கு நைதீதம் ஏற்று வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் மற்றும் கூட்டுத் தொழில் செய்யும் இடங்களில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத வாக்குவாதங்களை கூட்டுத்தொழிலாளர்களுடன் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மனதில் தேவையில்லாத குழப்பம் மற்றும் அவசர முடிவுகள் எடுப்பதை தள்ளி போட்டால் பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கலாம். கால பைரவரை வழிபாடு செய்தால் வருகின்ற பிரச்சனைகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் எதிரிகளால் சில தொல்லைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் தேவையில்லாத அலட்சியம் காட்ட வேண்டாம். ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் சந்தித்த நேரும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் நன்மை உண்டாகும்.
அதேபோல் கடன் வாங்குவதையும் இந்த காலகட்டங்களில் தவிர்த்தால் மிகப் பெரிய பொருளாதார சிக்கல்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். நீதிமன்ற வழக்குகள் சில தாமதத்தை சந்திக்கலாம். நீங்கள் உங்கள் ராசியின் அதிபதியாக உள்ள குருபகவானை வழி செய்தால் நல்ல பலன் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |