குலதெய்வத்தின் முழு அருளை பெற இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்து பாருங்கள்
எந்த கடவுள்கள் நம்மை கைவிட்டாலும் குலதெய்வம் கட்டாயம் நம்மை கை விடுவதில்லை. அதாவது கிரக நிலைகள் மோசமான நிலைக்கு சென்ற போதிலும் இறுதி நொடியில் நம்மை காக்க கூடிய தெய்வமாக கட்டாயம் குலதெய்வம் இருக்கும்.
அந்த அளவிற்கு குலதெய்வத்தின் சக்தி அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அப்படியாக, நாம் வருடம் ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வீடுகளில் குலதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி நெய்வேத்தியம் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் குலதெய்வத்தின் அருளைப் பெற நாம் என்ன பொருட்கள் படைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.


1.உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் நீங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று தேங்காய் படைத்து வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கும். அதேபோல் குலதெய்வம் கோவிலுக்கு சென்று சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் விலகி வேண்டுதல்கள் நிறைவேறும்.
2. உங்களுடைய குடும்பங்களில் வீண் சண்டை, சொத்து பிரச்சனை வாக்குவாதம் போன்றவற்றை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் குலதெய்வ ஆலயம் சென்று தயிர் படைத்து வழிபாடு செய்தால் அமைதி கிடைக்கும்.
3. அதைப்போல் குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று எலுமிச்சை பழம் படைத்து வழிபாடு செய்யும் பொழுது உங்கள் வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய தீய தாக்கங்களின் சக்திகள் குறையும்.

4. குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று பலவகையான உணவுகளை சமைத்து வழிபாடு செய்யும் பொழுது உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கிறது.
5. அதைப்போல் குலதெய்வத்திற்கு மஞ்சள் படைத்து வழிபாடு செய்யும் பொழுது திருமணம் தோஷம் மற்றும் திருமணத் தடை விலகும்.
6. குலதெய்வத்திற்கு குங்குமம் படைத்து வழிபாடு செய்யும் பொழுது குடும்பங்களில் பெண்களுக்கு நன்மையும் குடும்பத்தில் செல்வ வளமும் அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |