இந்த 3 ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஆசிரியராக இருப்பார்களாம்- யார் தெரியுமா?
ஆசிரியர் தொழில் என்பது மிகவும் முக்கியமான பணியாகும். மனிதாக பிறந்த எல்லோராலும் சிறந்த ஆசிரியர் ஆக முடியாது. காரணம் அவர்கள் ஒரு தொழில் தேர்ந்தெடுக்கவும் அந்த தொழிலில் வெற்றி பெறவும் கிரக நிலைகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே பிறருக்கு கற்று கொடுக்கும் திறன் இருக்கும். அவர்களை அறியாமலே அவர்கள் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுப்பார்கள். அப்படியாக, எந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆசிரியர் தொழில் செய்வதில் திறமைசாலிகள் என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான். ஒருவருக்கு புதன் பகவான் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபர் படிப்பிலும் பேச்சிலும் சிறந்து விளங்குவார். அந்த வகையில் கன்னி ராசியினருக்கு இயற்கையாவே பிறரை வழிநடத்தும் திறன் இருக்கும். இவர்கள் ஒருவருக்கு ஆலோசனை செய்வதில் சிறந்து விளங்குவார். இவர்களுக்கு இயற்கையாவே ஒருவருக்கு நல்லது கெட்டதை கற்றுக்கொடுத்து வழிநடுத்தும் திறனும் ஆசிரியருக்கான அனைத்து குணங்களும் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். குரு பகவான் தான் ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு பயணம் செல்ல வேண்டும் என்று வழிநடத்த கூடியவர்கள். அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஒரு விஷயத்தை அமைதியாக சொல்லி கொடுத்து வழிநடத்துவதில் திறமை சாலிகள். இவர்களுக்கு ஒருவருக்கு தெரியாத விஷயத்தை கற்றுக்கொடுப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். மேலும் இவர்கள் ஆசிரியர் தொழில் தேர்வு செய்தார்கள் என்றால் இவர்கள் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராக இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்த வரையில் அவர்கள் அனைத்தயும் தீர யோசித்து ஆலோசித்து செயல்படுபவர்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோல் வாழ்க்கையை ஒரு வரைமுறையில் வாழ வேண்டும் என்று வழி வகுத்து வாழக்கூடியவர்கள். மேலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் கற்று கொண்ட அனுபவத்தை கொண்டு பிறரை வழிநடத்துவதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் இயல்பாகவே ஒரு ஆசிரியருக்கு ஏற்ற அனைத்து குணங்களும் கொண்டு இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







