12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகம்- யாருக்கு அபூர்வ ராஜ யோகம் காத்திருக்கிறது
ஜோதிடத்தின் படி கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன் - குரு இணைவால், குறிப்பிட்ட சில 3 ராசிகளுக்கு மிக பெரிய மாற்றமும் அதிசயமும் நடக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நடந்தேறும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை சந்திப்பீர்கள். எதையும் தீர ஆலோசனை செய்து செய்வதால் எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய உள்ளது. இரண்டாவது திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு தாய் தந்தை வழியே வந்த பிரச்சனைகள் விலகி செல்லும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.
மீனம்:
மீன ராசிக்கு மிக பெரிய ராஜ யோகம் காத்திருக்கிறது. குழந்தைகள் வழியே ஏற்பட்ட பிரச்சனைகள் உங்களை விட்டு அகலும். பொருளாதார ரீதியாக நீங்கள் பட்ட துன்பங்கள் எல்லாம் படிப்படியாக விலகும். அரசு வேலை செய்பவர்களுக்கு பொற்காலம். வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |