சூரியனின் ஆட்டத்தால் பணமழையில் நனையும் 3 ராசிகள்
சூர்ய பகவான் கிரகங்களின் ராஜா ஆவார்.சூரியனின் நிலைக்கேற்ப ஒருவரின் செல்வாக்கு, கலைத்திறன் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும்,2024 ஆம் ஆண்டின் இறுதியில் சூரியன் மறைந்து 15 டிசம்பர் 2024 அன்று இரவு 9:56 மணிக்கு தனுசு ராசியில் நுழைந்தார்.இதனால் அதிர்ஷ்டத்தை தன் வசம் ஆக்கும் ராசிகளை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிக பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்க போகிறது.சூரியன் உங்கள் ஒன்பதாம் வீட்டைக் கடக்கிறார்,அதனால் அவர்களுக்கு வியாபாரம் செழிப்பாக அமையும்.இந்த காலகட்டத்தில் நீங்க போட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தோடு உயர் பதவிகள் கிடைக்கும்.நீண்ட நாளாக நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த யோகம் கிட்டும்.ஆடம்பர பொருளை வாங்குவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரியக் கடவுள்,ஆதலால் இவர்களுக்கு சூரிய பகவானின் அருள் எப்பொழுதும் கிடைக்கும்.மேலும் சூரியன் சூரியன் தனது ஐந்தாவது வீட்டில் நுழைகிறார் ஆதலால் இவர்களுக்கு தொழில் ரீதியாக சந்தித்த கஷ்டங்கள் எல்லாம் படி படியாக குறையும்.
குடும்பத்தில் உண்டான பிரச்சனை உண்டாகும்.கணவன் மனைவி இடையே சிறந்த புரிதல் உருவாகும்.ஆன்லைனில் வேலை செய்பவர்களின் சம்பளம் உயரும்.மாணவர்களுக்கு இது ஒரு அருமையான பொற்காலம்.
விருச்சிகம்:
சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிகளுக்கு மிக பெரிய பலத்தை கொடுக்க போகிறது.திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் படி படியாக குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு கூடும்.
குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டம் பெருகும்.குழந்தை இல்லாதவரக்ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |