செல்வம் பெருக பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்
ஆன்மீகத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று.வாஸ்து சரியாக இருக்கும் இடத்தில் அமர்ந்தால் எவ்வளவு பெரிய துன்ப காலமும் இன்பமாக மாறும்.அதே வாஸ்து குறைபாடு உள்ள இடத்தில் அமர்ந்தால் நாம் நிச்சயம் மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்து விடுவோம்.
அப்படியாக ஒருவர் வீட்டில் வாஸ்து ரீதியாக பூஜை அறை சரியான முறையில் அமையவேண்டும்.அப்பொழுது தான் வீட்டில் லட்சுமி தேவி அருளால் நமக்கு யோகம் உண்டாகும்.அதே போல் நிச்சயம் வீட்டில் எந்த ஒரு நஷ்டமும் உண்டாகாமல் இருக்க சில முக்கியமான பொருளை வீட்டில் வைப்பதால் நமக்கு செல்வம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்.
அந்த வகையில் நாம் பூஜை அறையில் வெள்ளி நாணயம் வைத்து வழிபாடு செய்ய வீட்டில் செல்வ வளம் பெருகும்.வெள்ளி எப்பொழுதும் செல்வம் மற்றும் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.ஆக நாம் வீட்டில் வெள்ளி நாணயத்தை வைக்க வீட்டில் பணக்கஷ்டம் விலகி மகிழ்ச்சி பொங்கும்.
அதே போல் வெள்ளி நாணயத்திற்கு நேர்மறை ஆற்றல் ஈர்க்கும் சக்தி உடையது.ஜோதிட சாஸ்திரத்தில் வெள்ளி என்பது சுக்கிரனுடன் தொடர்புடையது. சுக்கிரன் செல்வம், அன்பு மற்றும் அழகு ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார்.
பூஜை அறையில் வெள்ளி நாணயம் வைத்திருந்தால் சுக்கிரன் சாந்தம் அடைகிறார். மேலும் வெள்ளி நாணயத்தை வைப்பதற்கு குறிப்பிட்ட திசை இருக்கிறது.அதாவது வாஸ்து விதிகளின்படி, வெள்ளி நாணயத்தை பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் வைத்தால் நல்லது.
ஏனென்றால், இந்த திசை செல்வம் மற்றும் செழிப்புக்கான திசையாக கருதப்படுகிறது.வெள்ளி நாணயம் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்தால் வெள்ளிக்கிழமை அன்று வாங்கி வைப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
வெள்ளி நாணயம் நம் வீட்டில் அலுவலகத்தில் வைப்பதால் நேர்மறை சக்திகள் ஈர்த்து நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |