2025 நவம்பர்: இந்த 3 ராசிகளும் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த கிரகங்களுடைய மாறுதல்கள் தான் மனிதர்கள் உடைய வாழ்க்கையில் தாக்கத்தை உண்டு செய்து பல நேரங்களில் நேர்மறையாகவும் சில நேரங்களில் எதிர்மறையான தாக்கங்களையும் கொடுத்து நம்மை முன்னோக்கி நகர்த்தி செல்கிறது.
அந்த வகையில் 2025 நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களுடைய மாற்றத்தை மாற்றுகிறது. அவை ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும் சில ராசிகளுக்கு சற்று கடினமான காலமாக அமையப்போகிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர்? அவர்கள் எந்த விஷயங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் அவர்களுடைய வாழ்க்கை துணையுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும். மிகவும் போராட்டமான காலகட்டமாக இருந்தாலும் அவர்களுடைய துணையிடம் சற்று வார்த்தைகளில் கவனம் செலுத்தி வந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை சுமுகமான நிலையில் இருக்கும். சமுதாயத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும். இவர்கள் இறை வழிபாட்டில் மனதை செலுத்துவதால் மட்டுமே இவர்களுடைய வாழ்க்கை நலமாக மாறும்.
கன்னி:
கன்னி ராசியினர் கட்டாயம் அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க கூடும். தொழில் இடங்களில் உங்களை சுற்றி உள்ளவர்களை உங்களுக்கு எதிராக சில தகவல்களை கொடுக்க நேரலாம். ஒரு சவாலான காலகட்டமாக இருந்தாலும் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு நிதானமும் சரியானதாக அமைந்தால் மட்டுமே நீங்கள் வரப் போகின்ற காலத்தை சமாளிக்க கூடியதாக அமையும். ஆக எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்தோடு கையாள்வது அவசியம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த நவம்பர் மாதம் சற்று கடினமான மாதமாக இருக்கக்கூடும். அவர்களுக்கு மனதளவில் நிறைய போராட்டங்களை சந்திக்க கூடும். உடல் ரீதியாக நிறைய ஆரோக்கிய குறைபாடுகள் இவர்களுக்கு வரலாம். இவர்கள் இந்த மாதத்தில் அவர்களுடைய மனதிற்கும் உடலுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்மையாக அமையும். உடல் ரீதியாக பாதிக்கப்படுவதால் தொழில் ரீதியாக சில பின்னடைவை இவர்கள் சந்திக்க நேரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |