2025ல் 182 நாட்கள் செவ்வாய் அஸ்தமனம்-எதிர்பாராத பிரச்சனையை சந்திக்க போகும் 3 ராசிகள் யார்?

By Sakthi Raj Jan 16, 2025 10:32 AM GMT
Report

2025ல் செவ்வாய் அஸ்தமன நிலைக்குச் செல்கிறார்.அதாவது நவம்பர் 1, 2025 அன்று மாலை 6:36 மணிக்கு செவ்வாய் அஸ்தமன நிலைக்குச் சென்று, 182 நாட்கள் அங்கேயே இருப்பார். 182 நாட்களுக்குப் பிறகு, மே 2, 2026 அன்று காலை 4:30 மணிக்கு செவ்வாய் உதயமாகும். செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக திகழ்கிறார்.

இந்த செவ்வாய் தான் ஒருவரின் ஆற்றல், சகோதரன், பூமி, வலிமை, தைரியம், வீரம் போன்றவற்றைக் குறிக்கிறது.அப்படியாக இந்த செவ்வாய் சூரியனுக்கு அருகில் அஸ்தமன நிலைக்குச் செல்கிறார்.இவை 12 ராசிகளுக்கு பல வித தாக்குதல் ஏற்படுத்தினாலும் 3 ராசிகள் மிக பெரிய பிரச்சனையை கொடுக்க போகிறது.அந்த மூன்று ராசிகள் என்று பார்ப்போம்.

2025ல் 182 நாட்கள் செவ்வாய் அஸ்தமனம்-எதிர்பாராத பிரச்சனையை சந்திக்க போகும் 3 ராசிகள் யார்? | 3 Zodiac Sign Should Be Carefull In Sevai Peyarchi

ரிஷபம்:

செவ்வாயின் அஸ்தமனத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் தேவை இல்லாத பதட்டம் உண்டாகும்.மேலும் சிலர் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்படவாய்ப்புள்ளது.

அதனால் மன அழுத்தம் ஏற்படலாம்.தொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்மையை தரும்.வயதானவர்கள் உடல்நிலையில் மிக கவனமாக இருக்கவேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அஸ்தமனம் நல்லதல்ல.இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.

இதனால் உங்களுக்கு உயர் பதவி கிடைப்பதில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.குடும்பத்தில் தேவை இல்லாத செலவுகள் ஏற்படும்.திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் மனஸ்தாபம் ஏற்படலாம்.

இந்தியாவில் மிகவும் மர்மம் நிறைந்த கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்தியாவில் மிகவும் மர்மம் நிறைந்த கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

கும்பம்:

கிரகங்களின் தளபதியான செவ்வாய் அஸ்தமன நிலைக்குச் செல்வதால், கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும்.

நீண்ட வருடமாக ஒரே நிறுவனத்தில் வேலைசெய்பவர்களுக்கு சில சிக்கல் உண்டாகலாம்.இந்த கால கட்டத்தில் எந்த ஒரு ஒப்பந்தம் செய்யாமல் இருக்கலாம்.பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US