இந்த ராசிகளை சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் கர்ம காரகனாக அழைக்கப்படுகிறார். மனிதனுக்கு வாழ்க்கையில் நன்மை நடக்க வேண்டும் என்றால் நிச்சயம் சனி பகவானுடைய முழு அருள் இருக்க வேண்டும். மேலும் ஒருவருக்கு சனி பகவான் துன்பத்தை கொடுக்கிறார் என்றால் நிச்சயம் அந்த நபரை மிகப்பெரிய அளவில் உயர்ந்த போகிறார் என்பதின் அறிகுறி ஆகும்.
மேலும், சனி பகவான் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள் கட்டாயமாக அந்த மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல பாடமாகவே அமையும்.
இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒரு சில ராசியின் அதிபதிகள் சனிபகவானுக்கு நட்பு ரீதியாக தொடர்பு உள்ளவராக இருந்தாலும் சில ராசிகளின் அதிபதிகளுக்கும் சனி பகவானுக்கும் பகைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். சனி பகவான் இங்கு நீச்சமடைகிறார். நீச்சம் என்றால் அங்கு சனி பகவான் அவருடைய வலிமையை இழக்கிறார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான் வீரத்திற்கும், விவேகத்திற்கும் எதையும் முரட்டுத்தனமாக அணுகக்கூடிய பண்பு இருக்கும். சனிபகவான் நிதானத்தையும் பக்குவத்தையும் கொடுக்கக் கூடியவர். ஆக மேஷ ராசியில் சனி பகவான் இருக்கும் பொழுது அந்த ராசியினர் செய்யக்கூடிய அவசரமான செயல்களுக்கு இவர் அங்கு தடைகளை போடுகிறார்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரிய பகவான் ஆவார். புராணங்களின் அடிப்படையில் சூரிய பகவானுக்கும் அவருடைய மகனான சனிபகவானுக்கும் இடையே ஒரு நல்ல புரிதலும் உறவுகளும் இல்லை என்பதே பார்க்கப்படுகிறது.
சிம்ம ராசிக்காரர்கள் பொறுத்தவரை இவர்கள் இயல்பாகவே அதிகார தோரணையுடன் விளங்கக் கூடியவர்கள். ஆக, சிம்ம ராசிக்காரர்களின் அகந்தையை உடைக்க சனிபகவான் அவர்களுக்கு நிறைய சோதனைகளை கொடுக்கிறார். அதிலும் குறிப்பாக ஏழரை சனி காலங்களில் இவர்கள் கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
கடகம்:
கடக ராசிக்காரர்களின் அதிபதி சந்திர பகவான் ஆவார். மேலும், கடக ராசியினருக்கு சனிபகவான் எப்பொழுதும் குறைந்த நற்பலன்களை கொடுக்கிறார். சனிக்கும் சந்திரனுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பை ‘புனர்ப்பு தோஷம்’ என்று அழைக்கின்றனர்.
சந்திரன், மனதை குறிக்கக் கூடியவர். சனிபகவான் கடுமையான போராட்டங்களை கொடுக்க கூடியவர். மேலும், கடகம் மிகவும் மென்மையானவர்கள் என்பதால் அவர்களை சனி ஆட்கொள்ளும் பொழுது கடக ராசியினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேருகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |