மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம்- பொருளாதாரத்தில் சிறந்து விளங்க போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Jun 18, 2025 10:15 AM GMT
Report

 ஜோதிடத்தில் சந்திரன் ஒவ்வொரு இரண்டரை நாளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். இதனால் ஒவ்வொரு ராசிகளுக்கும் அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கும். அந்த வகையில், சனியின் ராசியான மகர ராசியில் சந்திரன் சஞ்சரிக்கப் போகிறார்.

சந்திரனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்டமாக அமையப்போகிறது. அந்த வகையில் மகர ராசியில் சந்திரனின் சஞ்சாரத்தால் எந்த ராசி பொருளாதாரத்தில் சிறந்து விளங்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

இன்று(18-06-2025) புதாஷ்டமி- திருமணம் கைகூட செய்யவேண்டிய வழிபாடு

இன்று(18-06-2025) புதாஷ்டமி- திருமணம் கைகூட செய்யவேண்டிய வழிபாடு

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திரனின் சஞ்சாரம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும், எதையும் தீர்க்கமாக முடிவு எடுக்கும் தன்மையும் பிறக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் காலம் ஆகும். திட்டமிட்டு பணி ஆற்றுவதால் வெற்றிகள் வந்து சேரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சி மனதில் நேர்மறை ஆற்றலை கொடுக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நீண்ட நாட்களாக தொந்தரவுகள் கொடுத்த நபர் உங்களை விட்டு செல்வார்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரனின் சஞ்சாரம் அவர்கள் நிதி நிலையில் முன்பை விட நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கொடுக்க உள்ளது. வியாபாரத்தில் சந்தித்த நஷ்டங்கள் விலகி லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை சந்திப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US