2026-ல் இந்த ராசியினருக்கு இடமாற்றம் உறுதி.. யார் தெரியுமா?
பல்வேறு துறைகளில் பணியாற்றக் கூடிய நபர்கள் எல்லோருக்குமே சிறிது காலம் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். அவ்வாறு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரு கனவானது அவர்களுக்கு சாதாரணமாக தோன்றி விடுவதில்லை.
அவர்களுடைய ஜாதக கட்டங்களில் இருக்கக்கூடிய கிரகங்கள் தான் அவர்களை இவ்வாறான சிந்தனைகளுக்கு தூண்டுகிறது.
அப்படியாக, வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பது வேறு கிரகங்கள் இவர்களை வெளிநாட்டு அல்லது வெளி மாநிலங்களுக்கு நகருத்துவது என்பது வேறு. அந்த வகையில் 2026 நிச்சயம் வேலையில் இடம் மாற்றம் பெறக்கூடிய ராசியினர் யார் என்று பார்ப்போம்.
தனுசு:
இவர்களுக்கு இந்த ஆண்டு நிறைய பயணங்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்க போகிறது. எதிர்பாராத விதமாக இவர்கள் தொழில் ரீதியாக ஒரு சில இட மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்.
அல்லது குறிப்பிட்ட ஒரு சில கால மட்டுமாவது வெளியூர் அல்லது வெளி மாநிலங்கள், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தை இவர்களுக்கு கிரக நிலைகள் ஆனது உருவாக்க இருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து திடீர் பயணங்கள் இவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது.
மீனம்:
மீன ராசியினருக்கு 2026 முழுவதுமே ஒரு சுற்றுலா பயணம் போல் தான் அமையப்போகிறது. இவர்கள் சிறிது நேரம் அமர்ந்து அவர்களுக்கான நேரத்தை செலவிட முடியாத அளவிற்கு இவர்கள் ஓடிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
ஒரு வகைகயில் பார்த்தால் இவர்கள் இவ்வாறு தொழில் ரீதியாக தங்களை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொள்வது என்பது இவர்களுடைய கிரக நிலைகளுக்கு பொருத்தமானது தான். அந்த வகையில் நிச்சயம் இவர்கள் இந்த ஆண்டு வெளிநாடு அல்லது வெளியூர்களில் குடும்பத்தை விட்டு சென்று வேலை பார்க்கக்கூடிய நிலை உருவாகப் போகிறது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு மனரீதியாக நிறைய குழப்பங்களை கொடுக்கப் போகிறது. இவர்கள் நிச்சயம் இந்த வருடம் நண்பர்களுடன் ஆவது வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்கள் என்று சுற்றுலா பயணம் செல்வார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் வேலை பார்க்கின்ற வாழ்க்கை துணை அமையக்கூடிய அற்புதமான நிலை இருக்கிறது.
அதோடு தொழில் ரீதியாக இவர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இடமாற்றத்தை சந்திக்கப் போகிறார்கள். வேண்டாம் என்று இவர்கள் முடிவு செய்தாலும் கிரக நிலைகள் இவர்களை நிச்சயம் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர்த்தி வெளியூர்களுக்கு இவர்களை கூட்டிச் செல்ல போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |