இந்த 3 ராசிகளுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் துணை நிற்குமாம்
ஜோதிடம் என்பது பன்னிரண்டு ராசிகளையும் 27 நட்சத்திரங்களையும் நவகிரகங்களையும் கொண்டு கணிக்க கூடிய ஒரு கலையாகும். அப்படியாக ஜோதிடத்தில் பல்வேறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இயல்பாகவே ஒரு சில ராசிகள் ஒரு சில அமைப்புகளை பெற்றெடுப்பார்கள். அந்த வகையில் இந்த மூன்று ராசிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிர்ஷ்டமான ராசிகளாக கருதப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
தனுசு:
குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியினர் பிறப்பிலே அதிக ஞானம் பெற்று இருப்பார்கள். இவர்கள் பரந்த சிந்தனை மற்றும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே குரு பகவானுடைய அருள் இருப்பதால் ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகங்களாக பார்க்கப்படுகிறார். ஆதலால் இவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் குரு பகவான் அருளால் வாழ்க்கையில் உயரத்தை பெற்று விடுவார்கள். மேலும் இவர்களுக்கு ஆன்மீக சிந்தனை பிறவியிலிருந்து அதிகம் காணப்படும்.
துலாம்:
சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியினர் அழகாகவும் சந்தோஷமாகவும் சமுதாயத்தில் ஒரு அமைதியான நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். சுக்கிரனின் ஆட்சி இவர்கள் ராசியில் இருப்பதால் இவர்களுக்கு பொருளாதாரத்தில் எப்பொழுதும் அவ்வளவு எளிதாக சிரமங்கள் வந்து விடுவதில்லை. அதுமட்டுமில்லாமல் துலாம் ராசிக்காரர்கள் கைராசிக்காரர்கள் என்றும் சொல்லுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் துலாம் ராசி நபர்களைக் கொண்டு நம் தொடங்கும் பொழுது அந்த காரியம் நல்ல விதத்தில் வெற்றி அடைகிறது.
மேஷம்:
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர் இவர்களிடம் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிக அளவில் காணப்படும். இவர்கள் எப்பொழுதும் ஒரு அதிகார இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். மேலும் செவ்வாய் பகவானுடைய தாக்கம் இவர்களுக்கு அதிக அளவில் இருப்பதால் ஒரு வழியில் கதவு அடைந்து விட்டாலும் மறு வழியில் இவர்களுக்கு எப்படியேனும் கதவுகள் திறந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







