இந்த 3 ராசிகள் சூழ்ச்சிகள் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்

By Sakthi Raj Sep 16, 2025 06:34 AM GMT
Report

இந்த 3 ராசிகள் சூழ்ச்சிகள் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம் மனிதர்கள் பலவகையான குணங்கள் கொண்டவர்கள். அதில் நல்ல மற்ற தீய எண்ணம் அடங்குகிறது. அப்படியாக ஒரு சிலருக்கு இயற்கையாகவே சூழ்ச்சிகள் செய்து வெற்றி காண்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

அதற்கு அவர்களுடைய ராசியும் ஒரு காரணமாக அமைகிறது. அந்த வகையில் எந்த ராசிகள் சூழ்ச்சிகள் செய்வதில் திறமை வாய்ந்தவர்கள். மேலும் அவர்களிடம் நாம் எந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

2025 புரட்டாசி முதல் நாள் பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நேரம்

2025 புரட்டாசி முதல் நாள் பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நேரம்

மிதுனம்:

மிதுன ராசியினரை பொறுத்தவரை அவர்கள் இரட்டை தன்மையை கொண்டவர்கள். இவர்களை நம்பி எப்பொழுதும் நாம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. நாம் சொல்லும் ரகசியங்களை சமயங்களில் அவர்கள் நமக்கு எதிராக தைரியமாக பயன்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு பொழுதும் இதை செய்தால் இந்த நபர் காயப்படுவார்கள் என்று எண்ணாதவாறு அவர்களுடைய செயல்கள் சுயநலமாக இருக்கும். ஆதலால் இவர்களிடம் எப்பொழுதுமே நம் வார்த்தைகளிலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்வதும் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினரை பொருத்தவரை அவர்கள் ஒருவரிடத்தில் எப்பொழுதும் குறை காண்பதில் மிக கவனமாக இருப்பார்கள் . அதாவது எந்த வார்த்தை பயன்படுத்தனால் கோபம் அடைவார்கள். பிறகு அதையே நமக்கு எதிராக பயன்படுத்தலாம் என்றபுத்திசாலித்தனம் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும். மேலும் இவர்கள் குடும்பங்களிடம் சரி, வேலை செய்யும் இடங்களிலும் சரி சூழ்ச்சிகள் செய்து அவர்களுக்கு சாதகமாக நிறைய விஷயங்களை செய்துக் கொள்வார்கள்

மகரம்:

மகர ராசியினரை பொருத்தவரை எப்பொழுதும் அவர்கள் ஒழுக்கமாகவும் சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவர்கள் ஒருவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்து அவர்கள் சொல்லும் வார்த்தைகளை அவர்களுக்கு எதிராக திருப்பும் வல்லமை பெற்றவர்கள். மேலும் ஒருவரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் பல வித்தைகளை கையில் எடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மகர ராசி எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் ஒருவரிடம் பெற்றுக் கொள்வதில் திறமைசாலிகள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US