முன்னாள் காதலர்களோடு எப்பொழுதும் தொடர்பில் இருக்கும் 3 ராசிகள்
காதல் என்பது மிக அற்புதமான உணர்வு. இருந்தாலும் காதலிக்க கூடியவர்கள் எல்லோரும் திருமணம் செய்வதில்லை. ஏதேனும் ஒரு கால சூழ்நிலையால் பிரிந்து விடக்கூடிய நிலை ஏற்படுகிறது. அந்த முறிவிற்கு பிறகு காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காத நிலையிலும் மீண்டும் பேசவே கூடாது ஒரு நிலையை தான் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் ஒரு சிலர் தங்களுடைய காதல் முறிவிற்கு பிறகும் அவர்கள் தங்கள் காதலன் காதலிகளுடன் நண்பர்களாகவே இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் இருப்பதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினர் காதல் முறிவிற்குப் பிறகும் நண்பர்களாகவே இருக்க கூடியவர்கள் என்று பார்ப்போம்.

துலாம்:
துலாம் ராசி பொறுத்தவரை இவர்கள் யாரையும் எதிரியாகவோ அல்லது ஒரு வெறுப்பாகவோ பார்க்க கூடாத ஒரு நிலை இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதைவிட முக்கியமாக தெரிந்த நபர்களை இவர்கள் தெரியாதவர்கள் போல் கடந்து செல்லக்கூடிய ஒரு நிலையை விரும்பவே மாட்டார்கள்.
அதனால் காதல் முறிவிற்கு பிறகு இவர்கள் முடிந்த அளவிற்கு அந்த உறவை ஒரு அமைதியான நிலையில் ஒரு நண்பர்களாக கொண்டு போகக்கூடிய ஒரு தன்மையை பெற்றிருப்பார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் எல்லோரையும் ஒரு நட்பாக பார்த்து பழக கூடியவர்கள். இவர்களுக்கு விருப்பு வெறுப்பு என்று எதையும் அதிக அளவில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதேபோல் இவர்கள் காதலில் பிரிந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை இவர்கள் பிரச்சனை இல்லாத நிலையில் கொண்டு செல்ல விரும்புவார்கள்.
அதைவிட முக்கியமாக காதல் முறிவிற்குப் பிறகும் இவர்களுடைய காதலர்களை எப்பொழுதும் தொடர்பு கொண்டு நலன் விசாரிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் பொறுத்தவரை இவர்களுக்கு மக்கள் கூட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இவர்களை சுற்றிலும் நிறைய நபர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால் இவர்கள் யாரிடமும் பகைமையை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இவர்களிடம் யாரேனும் வந்து வம்புக்கு அவர்கள் பகையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உண்டு. அதனால் காதல் வாழ்க்கை என்று வந்துவிட்டால் இவர்கள் அந்த காதல் முறிவு வந்தால் கூட அந்த நபருடன் எப்பொழுதும் ஒரு நல்ல நட்பு ரீதியாக தொடர்பில் இருக்கக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |